விருதுநகர் அருகே சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு எச்ஐவி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறுவன் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்பு அவர்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது தெரியவர, அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். […]
