கடலூரில் வருகின்ற 26ஆம் தேதி முழு ஊரடங்கை கடைபிடிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
