ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் உடைந்து கடந்த 8 நாட்களாக ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரால் நோயாளிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் […]
