கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் […]
