அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது வயது எண்பது. இவரும் பெரம்பலூரை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞரும் விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டி வந்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது […]
