தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ரயில் வாசல் படியில் பயணம் மேற்கொண்ட வாலிபர் தவறி விழுந்து தலை துண்டாகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் ஆரம்பிக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றின் தலை துண்டாக கிடந்துள்ளது. இதனை நெல்லை to ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயில் ஓட்டுனர் பார்த்து ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி தலைமை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட […]
