கேரளாவின் வயநாட்டில் 10 வயது மாணவி பாம்பு கடித்து உயரிழந்த சம்பவத்தில், மாவட்ட நீதிபதி அந்த பள்ளியின் சுகாதரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் அரசுப்பள்ளியில் ஷஹாலா (10) என்னும் மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த புதன்கிழமையன்று 20ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாணவியின் கால் அங்கிருந்த ஓட்டைக்குள் சிக்கிக்கொண்டது, பதறிப்போன அவர் காலை எடுக்க முயற்சிக்கும் போது, அதிலிருந்த […]
