Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

துப்பரவு பணியாளர்களுடன்…… துப்புரவு பணியில்…….. கலெக்டர்க்கு குவியும் பாராட்டு….!!

நாகையில் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில்  துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி நாள்தோறும் மழை கொட்டித்தீர்த்த வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் பெருகி மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி பாதிப்பை கொடுத்து வருகிறது. ஆகையால் நாகை மாவட்ட ஆட்சியர் இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொசுக்கள் அதிகம் இருக்கக்கூடிய செடிகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை துப்புரவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் வாந்தி மயக்கம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்புச்சந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 98 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இத்தகவலை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். மேலும்  செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உணவில் பல்லி விழுந்து இந்நிகழ்வு நடந்து இருக்கலாம் என கூறினார்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“A1 படத்திற்கு சிக்கல்” தடை செய்ய மகளிர் அணி கோரிக்கை …!

A1 திரைப்படத்தை தடை செய்ய கோரி அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக A1 திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்தணர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி நிர்வாகி துர்கா பேசுகையில்,A1 படத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியில்லா மாவட்டமாகும் தேனீ…50,000 மரக்கன்றுகள்…மாவட்ட ஆட்சியரின் அசத்தல் திட்டம்…!!

தேனி மாவட்டம் போடி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தேனியை வறட்சி இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரங்களை நட வேண்டுமெனவும் ,திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் பேரூராட்சி வாரியாக செயல்படுத்த வேண்டுமெனவும் திட்டமிட்ட அவர் , பேரூராட்சி செயல் அலுவலக அதிகாரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பறக்கும் படையினர் அதிரடி சோதனை..! 73 கிலோ நகைகள் பறிமுதல்…!!

சேலம் அருகே அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில்  73 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது.  மக்களவை தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தமிழக முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சேலம் மாவட்டம்  கொட்லாம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டடிருந்த அதிகாரிகள், அந்த வழியாக வந்த வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக சோதனை செய்தனர்.  பின்னர் கடைசியாக வந்த வேன் ஒன்றை தடுத்து  நிறுத்தி சோதனை செய்தபோது  அந்தவேனில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் நகைகள் கொண்டு […]

Categories

Tech |