நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குருவியான்பள்ளம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைய மதுக்கூடம் கிராமத்தில் வசிக்கும் தனது மகள் அமலா கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர்வரிசை பொருட்களை கொடுத்து விட்டு அங்கிருந்து தனது பேரனான ஆக்ரிஷ் என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த சிறுவன் தனது தாத்தா வீட்டின் அருகே உள்ள குளம் பகுதியில் மற்ற சிறுவர்களுடன் இணைந்து […]
