Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முதிர்வு தொகைக்கு வட்டி கொடுக்கவில்லை” வங்கிக்கு அபராதம்…. அதிரடி தீர்ப்பு….!!!

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வங்கிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் கால்வின் ஜோசப் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கால்வின் ஜோசப் வங்கி கணக்கில் உள்ள முதிர்ச்சி அடைந்த பணத்தை வேறு ஒரு கணக்குக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளார். இதனால் வங்கியானது முதிர்வடைந்த தொகையை மட்டும் செலுத்தி அதற்கான வட்டி தொகையை கொடுக்கவில்லை. இதனால் வட்டி படத்தை தருமாறு கால்வின் ஜோசப் வங்கியை அணுகியும் அவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி…. விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 17-ஆம் தேதி முதல் திருப்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி அன்று அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து, கோதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அக்கிவிளை பகுதியில் மார்க்கோஸ்(55) வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும், இருக்கின்றனர். வெளிநாட்டில் தொழிலாளியாக பணிபுரிந்த மார்க்கோஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் மார்க்கோஸ் குழித்துறை தாமிரபரணி ஆற்றல் குளிப்பதற்காக சென்றுள்ளார். தண்ணீர் அதிகமாக சென்றதால் திடீரென மார்க்கோஸ் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து ஆற்றில் குளித்தவர்கள் மார்க்கோசியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி சென்ற நண்பர்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பனங்காலவிளை பகுதியில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரின்(31) என்றால் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெரின் தனது நண்பரான ஜெபிசன்(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் வில்லுக்குறி பகுதியில் சென்றபோது ஜெபிசன் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க முடியுமா? முடியாதா?… கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாபுதூர் பகுதியில் தாமரைச்செல்வன்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் தீனதயாளன்(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் தாமரைசெல்வன் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தீனதயாளன் தாமரை செல்வனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என தாமரைச்செல்வன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தீனதயாளன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் குரைத்த நாய்…. துப்பாக்கியால் சுட்டு கொன்ற தொழிலாளி…. போலீஸ் அதிரடி…!!!

நாயை சுட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசைல்பைல் கிராமத்தில் கூலி தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவப்பா என்பவர் வளர்த்து வந்த நாய் வெங்கடேஷை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் அடைந்த வெங்கடேஷ் துப்பாக்கியால் அந்த நாயை சுட்டு கொன்றார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு பழம் என நினைத்து….. விஷ காய்களை தின்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விஷ காய்களை தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோட்டையூர் கொல்லை கிராமத்தில் கனிவிகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காட்டுப்பழம் என காட்டு பழம் என நினைத்து விஷ காய்களை பறித்து தின்றதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டைல்ஸ் கடையின் சேவை குறைபாடு…. “1 மாதத்திற்குள்” பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு…. அதிரடி உத்தரவு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டார் தொகுதியில் இருக்கும் டைல்ஸ் கடையில் 31 ஆயிரத்து 752 ரூபாய் கொடுத்து டைல்ஸ் வாங்கியுள்ளார். அந்த டைல்ஸ் வாங்கிய 4 மாதங்கள் இல்லையே ஓட்டைகள் விழுந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராகேஷ் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு டைல்ஸ் கற்களை மாற்றி தருமாறு கேட்டதற்கு கடை உரிமையாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கறிஞர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுமி தற்கொலை வழக்கு…. காதலன் அதிரடி கைது…. தாயின் பரபரப்பு புகார்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை கழுவன்திட்டை காலணியில் ரதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஶ்ரீசுமா மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கணவர் பிரிந்து சென்றதால் ஸ்ரீசுமா தனது இரண்டு மகள்களுடன் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வருகிறார். இதில் இரண்டாவது மகள் அக்ஷயா(16) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு செண்டை மேளம் இசைக்க சென்றுள்ளார். இந்நிலையில் செண்டை மேளம் இசைக்க வந்த சஜின் என்பவருடன் அக்ஷயாவுக்கு விளக்கம் மேற்பட்ட அது காதலாக மாறியது. இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அலறி துடித்த டேங்க் ஆபரேட்டர்…. எரித்து கொல்ல முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லகாரம்பத்தி கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் சங்கர் வீட்டிற்கு முன்பு விறகு கொட்டி வைத்துள்ளனர். அதனை அகற்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 வருடமாக வரன் தேடிய தந்தை…. நர்ஸ் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டு வலசு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடராஜ் தனது மகளுக்கு வரன் பார்த்து வந்துள்ளார். ஆனாலும் இந்திராவுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த இந்திரா தனக்கே திருமணமே வேண்டாம் என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மீனவர்கள் மாயம்…. மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை…!!!

இரண்டு குமரி மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் சகாய செல்சோ(37) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆண்டனி(33) என்பவரும் பக்ரைன் நாட்டில் தராப் மாஜித் என்பவரால் அவரது படகில் மீன் பிடிப்பதற்கு பணியில் அமர்த்தபட்டனர். கடந்த 17-ஆம் தேதி இருவரும் மீன்பிடிப்பதற்காக மொராக் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த 19-ஆம் தேதி அவர்கள் கரை திரும்பி இருக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

துணி காயப்போட சென்ற தாய்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவில் மணிகண்டன்- மாரீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதுடைய பரமேஸ்வரன் என்ற மகனும், 1 1/3 வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று மாலை மாரீஸ்வரி துவைத்து துணிகளை காய போடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த முத்துலட்சுமி தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி அன்று தீ விபத்து…. பற்றி எரிந்த மருந்து குடோன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மருந்து குடோனில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் 2-வது அவென்யூ பகுதியில் மருந்து குடோன் இருக்கிறது. நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு குடோன் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சனிடைசர், மாஸ்க், கையுறை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்த மருமகன்…. ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி…. நன்றி தெரிவித்த முதியவர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பாரதி நகரில் தயாளமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் பிரியா, மகன் டேனியல் சம்பத் ஆகியோரும் உயிரிழந்துவிட்டனர். இரண்டாவது மகளான தீபா அவரது கணவர் ரவி ஆகியோருடன் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். தற்போது தயாளமூர்த்தி சென்னை நங்கநல்லூரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கி வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தயாள மூர்த்தி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ஐசக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபாகரன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது நண்பரான ஜீவா(19) என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்கள் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே சென்றபோது வேகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரம்…. நடுரோட்டில் கைகலப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரசு பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அண்ணா சதுக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் தீவுதிடல் நிறுத்தத்தில் இறங்குவதற்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் போர் நினைவு சின்னம் அருகே சிக்னலில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த பயணியை கீழே இறங்கச் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பயணி பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. மாணவர்கள் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாணவர்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு பேரை சுற்றி வளைத்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இறச்சகுளம் ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் கணேஷ்(20), பாலிடெக்னிக் மாணவர் தமிழரசன்(19), சக்தி(19) மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. இன்ஜினியரிங் மனைவியை மிரட்டி செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னக்குழிவிளை பகுதியில் ஹைஜின் ஜோஸ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜா(38) என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் படுக்கை அறையில் சுஜா தூங்கிக் கொண்டிருந்தபோது மாடி கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனை அடுத்து அந்த மர்ம […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தலையில் கல்லை போட்டு கொலை செய்து விடுவேன்” மிரட்டிய மகனுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசபாளையம் பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனரான செந்தில்குமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் மதன்(19) கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடி போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மதன் தினமும் தனது தாய், தந்தை மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

துணியை காய போட்ட தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஸ்கர் குளித்துவிட்டு ஈர துணியை இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாஸ்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை சிபி காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்புலன்ஸ்…. துடிதுடித்து இறந்த காவலாளி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் வெண்மனம் புதூர் பகுதியில் ஆனந்தவேல்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்தவேல் வேலை முடிந்து நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிய போது பேரம்பாக்கம் நோக்கி வேகமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிறவியிலேயே காது கேட்காத சிறுமி….. அரசு மருத்துவமனையின் சாதனை…. மருத்துவமனையின் சாதனை….!!

முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போட்டிசெட்டியபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய நிவேதா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த தனது மகளை வள்ளிமலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“தனிநபர் சுத்தம் செய்யக்கூடாது” கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. மாநகராட்சி ஆணையாளரின் எச்சரிக்கை…!!!

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவு நீர் குழாய்களில் பழுது பார்க்கும் வேலையை தனி நபரிடம் கொடுக்கக் கூடாது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு விதிகளுக்கு புறம்பாக தனிநபரை நியமிப்பது சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்து உயிரிழப்பு ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களும், ஒப்பந்ததாரர்களும் அதற்கு பொறுப்பு. எனவே கழிவு நீர் தொட்டியை எந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்ய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த தகவல்…. டெம்போவை பிடித்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!!

கழிவு பொருட்கள் ஏற்றி வந்த டெம்போவுக்கு அதிகாரிகள் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சுகாதாரத்தை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்கம்புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டெம்போவை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 10 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து வேலை ஆட்களை ஏற்றுக் கொண்டு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மாம்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பத்தில் மோதி பெங்களூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மீதும் மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தீபாவளியின் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு செல்கின்றனர். கடைசி நேரத்தில் சிலர் ஆம்னி பேருந்துகளில் முண்டியடித்து செல்வதால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கத்திப்பாரா, அசோக் நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த விதிமுறைகளை மீறிய 8 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி என கூறி பல லட்ச ரூபாய் மோசடி…. நம்பி ஏமார்ந்த 3 பெண்கள்…. போலீஸ் விசாரணை….!!!

பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் கருணாநிதி நகரில் முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகுந்தன் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தபோது விஜயகுமார் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அந்த நபர் தான் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகவும், யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் சொல்லுங்கள் வாங்கிக் கொடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அடித்து கொன்ற முதியவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு முதியவர் மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் மணிமுத்தா ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த தங்கை…. அக்காவை கண்டித்த தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயதாரணி(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஜெயதாரணியின் தங்கை வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது எனக்கும் பட்டாசு தர வேண்டும் என கூறி ஜெயதாரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த தாய் நாகப்பிரியா ஜெயதாரணியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து ஜெய்தாரணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாடு மேய்ப்பதற்காக சென்ற பெண்…. நடந்த பயங்கர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மனப்பட்டி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நேற்று பசுமாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு சென்றபோது பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் கோகிலாவையும், பசுவையும் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பசு மாடும் உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுவரில் இருந்த ரத்த கறைகள்…. பெண்ணை கொன்று நாடகமாடிய கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள புத்தூர் வயல் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். மறுநாள் காலை தனது மனைவியை காணவில்லை என மோகன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த உஷாவின் தம்பி காவல் நிலையத்தில் தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி…. தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுகிறதா…? அதிகாரிகளின் திடீர் ஆய்வு…!!!!

உணவுகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க கடைகளில் குவிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ஹோட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகளை தயார்படுத்தி வருகின்றனர். சிலர் தரமற்ற இறைச்சியை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அஞ்சலி ரவுண்டானா அருகே இருக்கும் ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை பாறைபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி(72) என்பவர் வசித்து வருகிறார். வேலை விஷயமாக பழனிச்சாமி அடிக்கடி வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்த முதியவர் பழனிசாமி தானா? என அடையாளம் காட்டுவதற்கு உறவினர்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா…? களமிறங்கிய போக்குவரத்து துறை அதிகாரிகள்…!!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகனங்களில் உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுநர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி…. குமரியில் பரபரப்பு சம்பவம்….!!!

பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சஜீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஹென்சா ரோஸ் (9) என்ற மகள் உள்ளார் இந்த சிறுமி ஒயிட் மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி வேனில் வகுப்புக்கு சென்று விட்டு மாலையில் சிறுமி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த வாகனத்தை குணசேகரன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்” தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று மூலஸ்தானத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்ட நம் பெருமாள் சந்திராபுஷ்கரணி குளத்திற்கு வந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து காலை 9:45 மணிக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“உலகளந்த பெருமாள் கோவில்” திருமூல மகோற்சவத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத திருமூல மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் மடாதிபதி ஜீயர் முன்னிலையில் மணவாளமா முனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம் போட்டு காண்பித்த தாத்தா” சிறுமிகள் கூறிய அதிர்ச்சி தகவல்….. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய சம்பவம்….!!!

முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாத்தாவும், அதே பகுதியில் வசிக்கும் திருமண புரோகரான பழனிசாமி(65) என்பவரும் ஒன்றாக அமர்ந்து டிவியில் படம் பார்ப்பது வழக்கம். தனது தாத்தாவோடு சிறுமி அடிக்கடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. புதுமண தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி ஜெய்சங்கருக்கும் தாய் மாமன் மகளான சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினர் தேனிலவுக்காக குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்று விட்டு கடந்த 14-ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கராத்தே மாஸ்டரிடம் ரூ.21 3/4 லட்சம் மோசடி… நண்பர்கள் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கராத்தே மாஸ்டரிடம் 21 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சாரதா மில் ரோட்டில் கராத்தே மாஸ்டரான சௌகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக தனது வீட்டை 3 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து கடன் பெற முடிவு செய்தார். அப்போது சௌக்கத்துக்கு அறிமுகமான நாகூர் மீரான் என்பவர் வங்கியில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் 3 கோடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் இருக்கும் பழக்கடையில் குப்புசாமி என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் பிறந்த குப்புசாமியின் உடலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் அருண்குமார் என்பவருடன் குப்புசாமி மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அருண்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலதிபரிடம் 1 3/4 கோடி ரூபாய் மோசடி…. தம்பதி மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபரிடம் 1 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் பசந்த் சோனி என்பவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த மனோகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மனோகரனும், பசந்த் சோனியும் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலதிபர் மனோகரனை தொடர்பு கொண்டு தனக்கு ஜவுளி அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அதன் முன்பணமாக பல்வேறு தவணைகளாக 1 கோடியே 86 லட்சத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து…. விபத்தில் சிக்கி 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரிமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சின்னேரிபாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 பயணிகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பொது இடங்களில் இதை செய்யக்கூடாது” அதிகாரிகளின் அதனுடைய நடவடிக்கை….!!!

பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், பூபதி, சங்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பதாகைகள் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்தும் அதிகாரிகள் அபராதம் வசூல் செய்தனர். இவ்வாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீர்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடையநல்லூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருவம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மலையின் தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கி நின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாயை கொன்ற வழக்கு…. சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகர் திரு.வி.க தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமியின் மகன் மூர்த்தி(30) என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சாப்பாடு இல்லை எனக் கூறியதால் தனது தாயை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான மூர்த்தியின் தந்தை ராமலிங்கம்(57), தங்கை செல்வி(40) ஆகியோர் நீதிமன்ற விசாரணைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தையை வீட்டிற்கு அனுப்ப சான்றிதழ்”லஞ்சம் வாங்கி தற்காலிக ஊழியர்கள்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

தற்காலிக ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளர் கார்த்தி ஆகியோர் தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்” விளம்பரத்தை நம்பி 7 3/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பணம் கொடுத்தால் அழகான பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என ஒரு விளம்பரம் வந்ததை பார்த்து அந்த கல்லூரி மாணவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் முதலில் 2500 ரூபாய் செலுத்தினால் பெண்களின் புகைப்படத்தை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். பின்னர் நீங்கள் விருப்பப்பட்ட பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என அந்த நபர் […]

Categories

Tech |