போலீஸ்காரரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக்(38) என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அசோக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனால் அசோக் அவர்களை எச்சரித்துள்ளார். அப்போது நான்கு பேரும் அசோக்கை பலமாக தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்தார். […]
