Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செத்து கிடந்த 9 ஆடுகள்…. விஷம் வைத்து கொன்றது யார்….? போலீஸ் விசாரணை…!!

விஷம் வைத்து ஆடுகளை கொன்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியில் கோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் பெருமாள், சப்பானி ஆகியோருக்கு சொந்தமான ஆடுகளும், ராஜ் என்பவருக்கு சொந்தமான மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஆடு, மாடுகள் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்ததை பார்த்து அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சார்ஜ் போடும் போது…. திடீரென எரிந்த மின்சார ஸ்கூட்டர்….. நெல்லையில் பரபரப்பு…!!

மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் டேனியல் ஆசீர்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை டேனியல் தனது வீட்டு வளாகத்தில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து டேனியல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டானியல் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் அவரால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தார் கல்பாவி பகுதியில் தங்கராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான அண்ணாதுரை(22) என்ற மகன் உள்ளார். இன்னிலையில் அண்ணாதுரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அண்ணாதுரை அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு கொலை மிரட்டல்…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிவண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி மைதிலி என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணிவண்ணன் மைதிலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த மைதிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் சென்ட்ரிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்பாபு(20) என்ற மகனும் கிருஷ்ணபிரியா(16) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கிருஷ்ணபிரியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரகிரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சண்முகத்தாய் தனது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய நகர் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் காரில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார். புதூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாயில் நுரை தள்ளியபடி துடித்த சிறுமி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பெரும் சோகம்…!!

விஷ பூச்சி கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்குவளைவேடு கிராமத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகாசினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுஷ்கா(9) என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் அனுஷ்கா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளார். இதனை அடுத்து நள்ளிரவு நேரத்தில் சிறுமியை விஷ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலியை வழிமறித்து தகராறு…. தட்டிகேட்ட தந்தைக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையை 3 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் ஈச்சவிளை பகுதியில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜின்(20) என்ற மகன் உள்ளார். இவர் தொலையாவட்டம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அஜின் மாங்கரை செங்கிட்டான்விளை பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரின் மகளை காதலித்தது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. நேற்று அஜின் தனது நண்பர்களான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த மாமனார்…. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி புதுதெருவில் பாக்யராஜ்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் விஷ்ணு தேவி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மேனகா ஆஷா(1) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது பாக்கியராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு தேவியின் மாமனார் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேம்பால தூணில் மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 9.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து கோவை அவிநாசி சாலை எல்.ஐ.சி சிக்னல் வளைவில் வேகமாக திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி அவினாசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் சென்ற நண்பர்கள்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் அடுத்த ஜெயராம் நகரில் ஞானபிரகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கருவேப்பிலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஞானபிரகாஷ் தனது நண்பரான அஜித் என்பவருடன் சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரியில் குளித்துவிட்டு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி…. வீடுகளின் மேற்கூரைகள் சேதம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

உயர் மின்னழுத்த கம்பி வீடுகள் மீது அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து தண்டையார்பேட்டை உயர்மின் அழுத்த மின்கம்பி செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திருவொற்றியூர் மேற்கு பகுதி கார்கில் வெற்றி நகர், முகிலன் தெரு பகுதிகளில் மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. சுமார் 250 மீட்டர் நீளம் கொண்ட உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் லேசாக சேதமடைந்தது. இதுகுறித்து தானியங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போனில் மிரட்டிய உறவினர்கள்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். புதுச்சேரியில் உள்ள கலிதீர்த்தால்குப்பம் கிராமத்தில் ராஜலட்சுமி(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டாக ராஜலட்சுமியும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான அஷ்ரப் அலி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ராஜலட்சுமியின் பெற்றோர் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வில்லியனூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குழந்தை இல்லாத ஏக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைரபுரத்தில் கொத்தனாரான அசோக்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வெளியேறிய குடும்பத்தினர்….. அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. சென்னையில் பரபரப்பு…!!

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் கலாசாத்திரம் 2-வது அவென்யூவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 4-வது மாடியில் நேற்று திடீரென தீ பற்றி எரிந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சலீம் பாஷா, சகிதா ஆகியோர் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பில் பற்றி எரிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிளினிக்கிற்கு அழைத்து சென்ற மருத்துவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சித்த மருத்துவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயதுடைய சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தங்களது மகளை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் யாரோ ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மகளிடம் விசாரித்தனர். அப்போது சித்த மருத்துவரான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பியை பார்க்க சென்ற அண்ணன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலையில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கட்டிட பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இங்கு கடந்த 2 வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சைபில் சைக் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சைபில் சைக்கை பார்ப்பதற்காக அவரது அண்ணன் குலாம் ரசல் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் 10-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குலாம் ரசல் மாடியிலிருந்து தவறி கீழே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெற்றோரால் உயிருக்கு ஆபத்து” பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பவதாரணி(25) என்பவர் தனது கணவருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக நான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார்(32) என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தந்தை பெரியார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் மிதந்த குட்டி தவளை…. வலைதளத்தில் வைரல் வீடியோ…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!c

மது பாட்டிலுக்குள் தவளை மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(51) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாண்டி சித்தரேவு அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். அங்கு பாண்டி குவாட்டர் பாட்டிலை வாங்கி மது குடிப்பதற்காக அதனை குலுக்கியுள்ளார். அப்போது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் குட்டித் தவளை மிதப்பதை பார்த்து பாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

80 அடி ஆழமுடைய கிணறு…. தவறி விழுந்து பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வளையப்பட்டி கிராமத்தில் ராமாக்காள்(87) வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் 80 அடி ஆழமுடைய தண்ணீர் இல்லாத தோட்டத்து கிணற்றில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கூண்டு வைத்து பிடித்த நபர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

குருவிகளை பிடித்து விற்பனை செய்த நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அ.கலையம்புத்தூர் பகுதியில் கூண்டு வைத்து குருவிகளை பிடிப்பதாக பழனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் பழனி குமார், வனவர் சங்கர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குமாரசமுத்திரம் அருகே இருக்கும் வயல்வெளியில் வலை மற்றும் கூண்டுகளுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை வனத்துறையினர் மடக்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 3 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள தென்கரை பகுதியில் ஹரிஷ் ரகுமான்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஷேக் அப்துல்லா(23), முகமது தாரிக்(23) ஆகியோருடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் பெரியகுளத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பாலசுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கின் நடமாட்டம்…. 30-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து 30-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் பாலமுருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாலைபுதூரில் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் 12 அடி உயரத்தில் நான்கு புறமும் சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கழுத்தில் காயத்துடன் 30-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து பண்ணை ஊழியர்கள் அதிர்ச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை தர்மராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கும்டாபுரம் அடுத்த சாலையில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய சரக்கு வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் தர்மராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. உறவினர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் தாயாருக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியின் தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது உறவினரான ரியாஸ்(26) என்பவர் அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்வயர் மீது விழுந்த மரக்கிளைகள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான ஜோஸ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தில்குமாரி(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபிகா(15) வர்ஷிகா(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜோஸின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் அவரது வீட்டிற்கு முன் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார். அந்த மரக்கிளைகள் ஜோஸ் வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் மீது விழுந்து மின் விநியோகம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த மாணவி… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

10-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரித்து கோணம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீபா கணக்கு தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு தூங்க சென்ற சிறுமியை மறுநாள் காலை அவரது பாட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலையை வீசிய சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கடலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாய பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஹித் டோனி(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரோஹித் டோனி 18 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்த படகை பியஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் 18 நாட்டிக்கல் மைல் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது ரோஹித் டோனி கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அப்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டெம்போ வேன்…. துடிதுடித்து இறந்த மாணவர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விச்சு(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விச்சு பனிச்சவிளை பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் விச்சுவின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 நாட்களாக பாறையில் சிக்கியிருந்த மயில்…. வியாபாரிகள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்….!!

கடலில் இருக்கும் பாறையில் சிக்கி 3 நாட்களாக சிரமப்பட்ட மயிலை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் மரணப்பாறை ஒன்று அமைந்துள்ளது. இந்த பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் கடற்கரை வியாபாரிகள் உடனடியாக பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கடலின் உட்பகுதியில் இருக்கும் பாறையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் மூழ்கிய ரிக் லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. மீட்பு பணி தீவிரம்….!!

கிணற்றுக்குள் ரிக் லாரி விழுந்து மூழ்கிய விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி மூலம் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். நேற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் மணிவேல் என்பவரது தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு தோன்றுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இருக்கும் மண் பாதையில் லாரி பின்னோக்கி நகர்ந்தது. அப்போது ரத்தினசாமி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாழ்வதை விட சாவதே மேல்” தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

வயது முதிர்வு காரணமாக தம்பதியினர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி நாயக்கன்காட்டில் பெரிய தம்பி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள்(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு பேரும் மன உளைச்சலில் இருந்தனர். இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்த தம்பதியினர் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. படுகாயமடைந்த 3 பேர்…. திம்பம் மலைப்பாதையில் பரபரப்பு…!!

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரிலிருந்து மாவு அரைக்கும் கிரைண்டரில் உபயோகப்படுத்தக்கூடிய குழவி கற்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேன் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் சுந்தரலிங்கம், மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. துடிதுடித்து இறந்த பெண்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் நகரில் நாகராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரவடிவு(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாய்சங்கர்(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகராஜ் ஈரோட்டில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு மனைவி மற்றும் மகனுடன் காரில் சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. நகைக்கடை உரிமையாளர் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் கண்ணன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு கண்ணன் உறவினரது மணிவிழா நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குமராட்சி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. தவறாக பேசிய அக்கம்பக்கத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்காதலியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் பெயிண்டரான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் வினோத்குமாருக்கும், அவரது நண்பரின் மனைவியான 33 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தில் வினோத்குமார் அங்கு சென்று அவரது மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சினிமா பார்த்து விட்டு வந்த குடும்பத்தினர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் முத்தம்மன் நகர் முதல் தெருவில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலீப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திலீப்குமார் தனது குடும்பத்தினருடன் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அறைக்குள் தூங்குவதற்காக சென்ற திலீப்குமார் காலை நீண்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்கள்…. திடீரென பற்றி எரிந்த தீ…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சென்னீர்குப்பம் பைபாஸ் சர்வீஸ் சாலையை வட்டி விபத்தில் சிக்கிய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதனருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென குப்பைகளில் தீப்பிடித்து அங்கு நின்ற வாகனங்களில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட நபரின் விவரம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகுளம் விநாயகர் நகர் பகுதியில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்கு அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. போலீஸ் விசாரணை…!!

தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து நாசமானது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நகரகளந்தை பிரிவு அருகே தனியார் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தென்னை நார் முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவர் அனுப்பிய நோட்டீஸ்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் செந்தில் நகர் 8-வது குறுக்கு தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் ராகதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக ராகதேவி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் சதீஷ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

வீட்டிற்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அடையாறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்டதாரி பெண் தனியாக வசித்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி அந்தப் பெண் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப்பெண் வீட்டிற்குள் நுழைந்த உடன் வாலிபர் அத்துமீறி உள்ளே சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து வாயில் துணியை வைத்து, கைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. பிறந்த நாளில் கணவன் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் பிறந்த நாளன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குமனஞ்சாவடியில் ஜீவானந்தம்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கோமதி (22) என்ற பெண்ணை ஜீவானந்தம் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்கள்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை….. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செக்காரவிளை கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லத்தாய்(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் செல்லத்தாய் தான் நடத்தி வரும் துணிக்கடையில் இருந்துள்ளார். அப்போது மூன்று வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து லுங்கி என்ன விலை என கேட்டுள்ளனர். இதனையடுத்து விலையை கூறியவாறு செல்லத்தாய் லுங்கியை எடுத்து காண்பித்துள்ளார். அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குரங்குகளுக்கு உணவு வழங்க கூடாது” சுற்றுலா பயணிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூர், கேர்மாளம், சத்தியமங்கலம் ஆகிய வனபகுதிகள் மழை பெய்து வருவதால் பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் ஆசனூர் பகுதியின் இயற்கை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்குகளுக்கு சுற்றுலாப்பயணிகள் பொரித்த உணவுப்பொருட்களை வழங்குகின்றனர். இதனை சாப்பிடும் குரங்குகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றன. எனவே வனத்துறையினர் பொரித்த பண்டங்களை குரங்குகளுக்கு வழங்க கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வலியில் துடித்த இளம்பெண்…. மாத்திரை வாங்க சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கனிராவுத்தர்குளம் காந்திநகர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான நிவேதா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவன விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் நிவேதா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிவேதாவிற்கு மாத்திரை வாங்குவதற்காக ராமசாமி மெடிக்கலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்ற சிறுமி உயிரிழப்பு…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டையில் ஜெயகிருஷ்ணன்- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாக்சி(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் மற்றும் வாந்தி எடுத்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணீர் ஊற்றியதால் தகராறு…. பெண் போலீஸ் தற்கொலை முயற்சி…. சென்னையில் பரபரப்பு…!!

பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லியில் இருக்கும் காவலர் குடியிருப்பில் பாபுஜி- பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாபுஜி பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதே குடியிருப்பில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்க்கும் அமுதா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பானுமதி கீழே தண்ணீர் ஊற்றுயதால் வழுக்கி விழுந்து ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புளியம்பழம் பறித்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மரத்திலிருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வி.அம்மாபட்டி கிராமத்தில் செல்லன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிளாங்குளம் ஊருணி கரையில் இருக்கும் புளிய மரத்தில் புளியம்பழம் பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக செல்லன் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்டி வைத்து வாயில் விஷத்தை ஊற்றிய கணவன்…. கூச்சலிட்ட இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிறுதலைக்காடு மேல தெருவில் குமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனபாக்கியம்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் தனபாக்கியத்தின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது குமார் தனபாக்கியத்தின் கையை பின் பக்கத்தில் […]

Categories

Tech |