Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு வந்த தந்தை…. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி வெல்லம்சாமியார் தெருவில் ஸ்ரீமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் இருக்கும் ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த ஸ்ரீமுருகன் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அண்ணன் தம்பிக்கிடையே தகராறு…. விவசாயி வெட்டி படுகொலை…. விருதுநகரில் பரபரப்பு…!!

விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரம்(65), மாரிமுத்து(59) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தங்கசாமிக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தை பிரித்ததில் அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விவசாயியான மாரிமுத்து ஜேசிபி எந்திரம் மூலம் எலுமிச்சை செடிகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது சமுத்திரம் அங்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சமுத்திரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிசில்வாடியில் இருந்து ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மல்லன்குழி நோக்கி டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டர் மல்லன்குழி நால்ரோடு அருகே வளைவில் திரும்ப முயன்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார் . இந்த விபத்து குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த யானை…. அச்சத்தில் அலறிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

யானை அரசு பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரப்பள்ளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது தாளவாடி நோக்கி சென்ற அரசு பேருந்தை யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் விழுந்த மூங்கில் மரம்…. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து…. நெடுஞ்சாலை துறையினரின் செயல்…!!

சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து தலைமலை செல்லும் சாலையில் தொட்டபுரம், காந்திநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. நேற்று காலை நெய்தாளபுரம் அருகே மூங்கில் மரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அவழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாமியாரை கொன்று மருமகள் தற்கொலை…. கதறிய குடும்பத்தினர்…. சேலத்தில் பரபரப்பு சம்பவம்…!!

மருமகள் மாமியாரை அடித்து கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் எல்லப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தைலம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அதே பகுதியில் மூதாட்டியின் கடைசி மகனான மெய்வேல் என்பவர் அவரது மனைவி செல்வியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டிக்கும், செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கார் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கார் திம்பம் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பயந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு…. வலையில் சிக்கிய ராட்சத சுறா மீன்கள்…. மகிழ்ச்சியில் மீனவர்கள்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத சுறா மீன்கள் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சூறாவளி காற்று வீசியதால் குறைந்த அளவிலான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனை அடுத்து சூறாவளி காற்று பலமாக வீசியதால் விரைவாக மீனவர்கள் கரை திரும்பினர். இந்நிலையில் ஒரு படகில் இருந்த மீனவர்களின் வலையில் 200 மற்றும் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன்கள் சிக்கியது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில் நடந்த சம்பவம்…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த தம்பதி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். உடனடியாக அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட பொதுமக்களும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரைபந்திவிளை பகுதியில் செல்லப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லதங்கம்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்லதங்கம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் சில வாலிபர்கள் உடனடியாக செல்ல தங்கத்தை மீட்டு ஆட்டோ மூலம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டி பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு…. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 29-ஆம் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குலசேகரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், அழகிய மண்டபம் ஆகிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறையில் இருந்து வந்த துர்நாற்றம்…. விடுதியில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விடுதியில் அறை எடுத்து தங்கி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கடந்த 30-ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையில் விழுந்த மர கிளையை தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்புறப்படுத்தினர். சென்னை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மயிலாப்பூர், மெரினாவில் இருந்து அண்ணா சாலை செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையின் குறுக்கே இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளேடால் உடல் முழுவதும் வெட்டி ரகளை செய்த வாலிபர்…. மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் ஆனஸ்ட்ராஜ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஆனஸ்ட்ராஜ் அவரது மனைவி விஜயா உடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் பேனா கத்தியால் உடம்பு முழுவதும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய பேருந்து…. வேலைக்கு சென்ற பெண் பலியான சோகம்…. கோர விபத்து…!!

பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தனேரி தெற்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூராக்காள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சூராக்காள் பட்டாசு ஆலைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து சூராக்காள் மீது மோதியது. இதனால் உடல் நசுங்கி படுகாயம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முடியை வெட்டுமாறு வற்புறுத்திய பெற்றோர்…. கல்லூரி மாணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெலடிப்பேட்டை அண்ணா தெருவில் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இலக்குவன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இலக்குவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான கடையில் தீ விபத்து…. ரூ.9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுபான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு கடையிலிருந்து கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி தேவர்நகர் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரியதர்ஷினி, அங்கயர்கன்னி, ஜோதிமணி, ராஜகுரு, உமா மகேஸ்வரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தம்பதியினர்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…. கடலூரில் பரபரப்பு….!!

முதியவரை கொலை செய்த கணவன், மனைவிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் தாமரைச்செல்வன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கனகராஜ்(44), அவரது மனைவி தனசெல்வி(34) ஆகிய இரண்டு பேரும் இணைந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தவறாக நினைத்த கூலி தொழிலாளி…. மீனவர் அடித்து கொலை…. கடலூரில் பரபரப்பு…!!

மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன்பாளையத்தில் மீனவரான பன்னீர்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் கூலி தொழிலாளியான குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகனை யாரோ அடித்து விட்டதாக கூறி பன்னீர் தெருவில் நின்று திட்டி கொண்டிருந்தார். அப்போது தன்னை திட்டுவதாக நினைத்து குமார் பன்னீருடன் தகராறு செய்துள்ளார். மேலும் மரப்பலகையால் குமார் பன்னீரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் காயமடைந்த பன்னீரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மனைவியை மீட்டு தாங்க” காதல் திருமணம் செய்த வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளியான சூர்யா(22) என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா ஆசிரியர் காலணியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவிமங்கலம் கிராமத்தில் தினேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் வீட்டுமனை மற்றும் காலி மனை உள்ளிட்டவற்றை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தினேஷ் மகாதேவிமங்கலம் கிராமத்தில் கூடுதல் பொறுப்பாக வேலை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் மனு அளித்துள்ளார். அப்போது 8000 லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா பெயர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியை அழைத்து வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நேசவாளர் காலனியில் தொழிலாளியான நாகராஜன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கல்யாணி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்யாணி அவரது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் கல்யாணியை சமாதானப்படுத்தி நாகராஜன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு பின்புறம் வைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தகராறு செய்த தொழிலாளி…. தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தகராறு செய்த கணவரின் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார் கிராமத்தில் கிருஷ்ணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணன் தனது மனைவி விஜயலட்சுமி உடன் மேட்டு தும்பூர் பகுதியில் இருக்கும் தனியார் செங்கல் சூலையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்….!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய பவன் என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை வீட்டு வாசலில் பவன் சைக்கிளில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது செங்கற்களை ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் நோக்கி மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி…. மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…. சென்னையில் பரபரப்பு…!!

மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதம்பாக்கத்தையடுத்த உள்ளகரத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியாளர் ரவி என்பவர் 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து ரவி மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேறு பெண்ணுடன் திருமணம்…. 3-வது நாளிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் கொத்தனாரான குமரேசன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக குமரேசனும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த குமரேசனின் பெற்றோர் பெண்ணின் குடும்பத்தினருடன் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். கடந்த 23-ஆம் தேதி அதே பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருமணம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் கேட்ட மகன்…. தந்தையால் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துறிஞ்சிபட்டி பகுதியில் ஓட்டுநரான சூர்யா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா அவரது தந்தையிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் சூர்யாவின் தந்தை பணம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சூர்யா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மலையடிவாரத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. படுகாயமடைந்த 11 பேர்…. விருதுநகரில் கோர விபத்து…!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியான நிலையில், 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் களை எடுக்கும் பணிக்காக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் பணி முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டபோது டிராக்டர் மலையடிவாரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம்மாள்(65) என்பவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற கணவன்,மனைவி…. பயங்கரமாக மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி பசும்பொன் நகர் பகுதியில் சங்கர நாராயணன்(58) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாமாதவி(54) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் மோட்டார்சைக்கிளில் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது மதுரையை நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென பிரேக் பிடித்த பேருந்து ஓட்டுநர்…. சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காளீஸ்வரன்(24) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேதுராஜபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென முன்னால் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக காளீஸ்வரன் லாரியை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென பறந்து வந்த கதண்டுகள்…. சிறுமி உள்பட 11 பேர் காயம்…. கரூரில் பரபரப்பு…!!

கதண்டுகள் கடித்ததால் சிறுமி உள்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னரெட்டிப்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் மண்வரப்பு அமைக்கும் பணியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பறந்து வந்த கதண்டுகள் சின்னம்மாள்(65), மலர்(47), கவிநிதா(3), தனலட்சுமி(44), சர்வேஸ்வரன்(4), தேவிகா(35) உள்பட 11 பேரை கடித்தது. இதனால் காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தில் மது குடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி விளாங்காட்டு காலனியில் தொழிலாளியான இசக்கியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இசக்கியப்பன் அடிக்கடி பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மது குடித்து செலவழித்துள்ளார். சம்பவத்தன்று இசக்கியப்பன் மது குடிப்பதற்காக பணம் கேட்டு சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது பணம் கொடுப்பதற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய டெம்போ…. படுகாயமடைந்த 7 பேர்…. குமரியில் கோர விபத்து….!!

லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டணம் பகுதியில் ஏசுதாஸ்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டெம்போவில் அதே பகுதியை சேர்ந்த ஜான் பேபின்(50), அமல ஜஸ்டின்(42), பிரான்சிஸ்(56), கனகராஜ்(56), ததேயுஸ்(49) ஆகியோருடன் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து டெம்போவில் மீன் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை புறப்பட்டார். இந்த டெம்போவை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அளத்தங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாட்டு சாண குழிக்குள் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த தாயார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாட்டுச்சாண குழிக்குள் தவறி விழுந்து 1 1/2 வயது குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வள்ளவிலை தேரிவிளாகம் பகுதியில் அருண் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹின்றா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஹின்றாவின் தாயார் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகை அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென குழந்தை காணாமல் போனதை கண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் கையெழுத்து போட சென்று…. மர்மமாக இறந்த வாலிபர்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

ஜாமீன் கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை குற்றியான்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு அஜித்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒருவரிடம் தகராறு ஈடுபட்ட குற்றத்திற்காக அஜித்தை குலசேகரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

9 மாத குழந்தையுடன் சென்ற ஆசிரியை…. பள்ளிகூடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

9 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் தர்கா சாலையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார் இவர் தனது வீட்டிற்கு அருகே இயங்கும் மழலையர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கவிஸ்ரீ இத்திகா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ வேலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேர்வு முடிவு குறித்து பயம்…. 11-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகிராமன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேரம்பாக்கத்தில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். வருகிற 27-ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ளது. இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் ஜானகிராமன் நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. உடல் நசுங்கி பலியான வங்கி அதிகாரி…. சென்னையில் பரபரப்பு…!!

மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததால் வங்கி அதிகாரி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவில் கபிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி(57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கே.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வாணி அவரது தங்கை எழிலரசியுடன் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய பேருந்து…. காயமடைந்த 20 பேர்…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு பெண் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து நேற்று காலை அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அத்திப்பட்டு கலைவாணர் நகர் சந்திப்பு சாலை வளைவில் வேகமாக திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைப்பளு தான் காரணமா….? வருவாய் ஆய்வாளர் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் அம்பேத்கர் நகரில் அருண்குமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேப்பாக்கத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேவி(37) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழரசி(11) என்ற மகளும், தமிழ்ச்செல்வன்(10) என்ற மகனும் இருக்கின்றனர். நிலையில் நேற்று காலை அருண்குமார் நீண்ட நேரம் ஆகியும் அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த தேவி கதவை தட்டியுள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி கம்பைநல்லூர்- கிட்டம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அக்கம் பக்கத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்ற காதலன்…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் மாணவியுடன் தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் 14வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து சிலம்பரசன் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது சிலம்பரசனின் பெற்றோர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

துரத்தி சென்ற தெருநாய்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சோளிகவுண்டனூர் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வெளியே வந்தது. இதனை பார்த்ததும் தெரு நாய்கள் புள்ளிமானை விரட்டி சென்றுள்ளது. அப்போது தெரு நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய புள்ளி மான் செந்தில் குமார் என்பவரது விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறையிலிருந்து விடுதலையான வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் துரைசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பாலாஜி சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டடிபாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் ராஜேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர்கள் ஈரோடு-சத்தி ரோட்டில் இருக்கும் சாந்தி தியேட்டர் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த வேன் சண்முகத்தின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

2 குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொளஞ்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி(35) என்ற மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்திக்கும், தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு விஷ்வாணிஸ்ரீ(10), அக்ஷிதாஸ்ரீ(6) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஆர்த்தி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளத்தில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயங்குடியில் இருக்கும் பிள்ளையார் கோவில் குளத்தில் வாலிபரின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அதே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. சோகத்தில் கிராம மக்கள்…!!

மின்னல் தாக்கிய 4 ஆடுகள் உயிரிழந்த நிலையில், வாலிபர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பருத்திக்காடு வேட்டை பாறை பகுதியில் சுந்தர் ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று பொம்மையன் கரடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது சுந்தர்ராஜ் ஆடுகளுடன் அங்கிருந்த குடிசை ஓரம் ஒதுங்கி நின்றுள்ளார். இதனையடுத்து திடீரென மின்னல் தாக்கியதால் 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. […]

Categories

Tech |