Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின்கம்பம் மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மின்கம்பம் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயர் தப்பினார். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மகாராஜபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்று உயிர் தப்பினார். லாரி மோதியதால் மின்கம்பம் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் மீட்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டு கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தினகரன், ஹரி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் ஜோதிடரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சாந்தி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 18-ஆம் தேதி ஜோதிடம் பார்ப்பதற்காக சங்கர் கேரளா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சங்கர் வீட்டை விட்டு வெளியேறி கடைக்கு சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த மாணவர்…. சரமாரியாக தாக்கிய சிறுவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி மாணவரை தாக்கிய சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளம் கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சஞ்சய் ஆயன்குளம் பேருந்து நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் வந்து இறங்கினார். அப்போது திடீரென இரண்டு சிறுவர்கள் அங்கு சென்று சஞ்சயை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதனால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு…. தம்பியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கொடுக்கல் வாங்கல் தகராறில் தம்பி அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல் அச்சமங்கலம் பகுதியில் ஜெயராமன்(66) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் (54) என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 17-ஆம் தேதி கோவிந்தராஜ் கடைக்கு சென்று கொண்டிருந்த தனது அண்ணி ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த ஜெயராமன் கோவிந்தராஜை தட்டி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும், களவுமாக சிக்கிய பெண் அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாவலர் நகர் 2-வது தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரி பத்மினி வசந்தபுரி நகரில் புதிதாக வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டின் மின் இணைப்புகளை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் பத்மினி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தஞ்சை மேற்கு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கணக்கிட்டாளராக வேலை பார்த்த தேன்மொழி பத்மினியிடம் 4500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் சந்திரமௌலி சாஸ்திரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாபுராஜபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக சந்திரமௌலி காரை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த விளம்பர பலகை மற்றும் மின் கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம்” பொதுமக்களின் கோரிக்கை…!!

சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலே ஜமால் உசேன் நகர் 2-வது தெருவில் இருக்கும் மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னரே அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது சகோதரியான ஈஸ்வரி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட விஜயலட்சுமி திரும்பி வரவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாலியல் பலாத்கார வழக்கு…. 13 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளி கைது…. போலீஸ் அதிரடி…!!

13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான சசி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சசிக்கும் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த சசி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற வாகனங்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இந்நிலையில் பேருந்து நிலையத்தை சுற்றி இருக்கும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அங்கேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று குளச்சல் போக்குவரத்து போலீசார் பேருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பத்மநாபபுரம் கோட்டை சுவர்” மரம், செடிகளை அகற்றும் பணி தீவிரம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பத்மநாபபுரம் கோட்டை சுவரில் வளர்ந்து நிற்கும் செடி மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றிலும் கம்பீரமான கல்கோட்டை சுவர் அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாக பத்மநாபபுரம் ஆர்.சி தெரு பக்கமுள்ள சுவரின் ஒரு பாகம் இடிந்து விழுந்தது. மேலும் கோட்டை சுவரின் மீது வளர்ந்து நின்ற மரம் சுவரை பெயர்த்து கொண்டு வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அச்சத்தில் இருந்தனர். நேற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முழுக்கோடு அழகனாமூலை பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அல்போன்சா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அல்போன்சா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விவசாயி மீது தாக்குதல்…. தந்தை-மகனுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விவசாயியை தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் விவசாயியான சேகர்(45) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ராமஜெயம்(70), அவரது மகன் பிரபு(35) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சேகருக்கும், ராமஜெயத்தின் குடும்பத்தினருக்கும் இடையே ஊர் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராமஜெயம் தனது மகனுடன் இணைந்து சேகரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி செல்ல முயன்ற வாலிபர்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. குமரியில் கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் தொழிலாளியான செல்வகுமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது அண்ணனான நேசமணி(38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வட்டக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுசீந்திரம் பழைய பாலம் வளைவு பகுதிக்கு வந்த போது முன்னால் சென்ற அரசு பேருந்தை செல்வகுமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலைதடுமாறி கீழே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள எண்டப்புளி புதுப்பட்டி பகுதியில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலேஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கபிலேஷ் உறவினர் ஒருவருடன் பெரியார் பிரதான நீர் பாசன கால்வாயில் குளித்து கொண்டிருந்தான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டெம்போவில் கடத்திய பொருள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

டெம்போவில் கடத்தி சென்ற ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழியில் இருந்து டெம்போவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் சென்ற ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் டெம்போ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெம்போவில் 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான பெலிக்ஸ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெலிக்ஸ் மோட்டார் சைக்கிளில் கோதமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெலிக்ஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வலி தாங்க முடியவில்லை” கர்ப்பிணி பெண் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆட்சிபுரத்தில் அழகுமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த சில வாரங்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எந்த முன்னேற்றமும் இல்லை” அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முல்லையூர் பகுதியில் பொன்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்ட பொன்ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த வேன் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

500 அடி மலை உச்சியில் சிக்கிய ஆட்டு குட்டி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

பாறை இடுக்கில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் குப்புசாமி-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மீனா அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இதனை அடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த மீனா ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் உறவினர்களுடன் இணைந்து மீனா ஆட்டுக்குட்டியை தேடி அலைந்தார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை” தீயணைப்பு வீரர் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னகாமன்பட்டியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தீயணைப்பு துறை பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் கரூரில் இருக்கும் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் ராஜேஷ் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட ராஜேஷ் தனது அண்ணன் ரஞ்சித் என்பவரை வரவழைத்துள்ளார். பின்னர் எனக்கு இந்த பணி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்கு அழைத்து சென்ற முதியவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சித்தேரிகரை பகுதியை சேர்ந்த மணி(75) என்பவர் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து குளிக்க வைப்பதாக கூறி மணி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை….. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. விருதுநகரில் பரபரப்பு சம்பவம்…!!

மர்ம நபர்கள் கணவன், மனைவி இருவரையும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் சங்கர பாண்டியன்(72)-ஜோதிமணி(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவரது மகன் சதீஷ் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று சங்கரபாண்டியனின் வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அப்போது கதவு திறந்து கிடந்தது. இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாலித்தீன் கவரை விழுங்கிய குழந்தை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பின் நடந்த சோகம்…!!

பாலித்தீன் கவரை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி எம்.துரைசாமிபுரத்தில் கார்த்தீஸ்வரன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பூவிழி என்ற பெண் குழந்தையும், கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் மசாலா பாக்கெட் பாலித்தீன் கவரின் ஒரு பகுதியை கலைக்கதிர் விழுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் சிவகாசியில் இருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தோப்பில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிராமத்தில் ராஜேந்திரன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான தோப்பில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேந்திரனை அவரது மகன் மனோஜ் குமார் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜ் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமியாபுரத்தில் பட்டாசு தொழிலாளியான காளியப்பன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாராயணபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் காளியப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

லாரி புக்கிங் ஏஜெண்டை ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் முனியசாமி கோவிலின் பின்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாமியார் வீட்டிற்கு சென்று வருகிறேன்” குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(11), கௌசிகா(9) என்ற மகள்களும், ஹரிஹரன்(7) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நந்தினி தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் முருகேசனும், உறவினர்களும் நந்தினி மற்றும் குழந்தைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி…. சேதமடைந்த பேருந்தின் பின்பகுதி…. பரபரப்பு சம்பவம்…!!

லாரி மோதியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் இருந்து காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை யோகநந்தன்(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அருப்புக்கோட்டை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி உரசியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீரென ஏற்பட்ட மண்சரிவு…. பரபரப்பு சம்பவம்…!!

மண் சரிந்து விழுந்ததால் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகர் முக்கிரந்தால் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழியில் பதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குழாய்களை இணைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிருஷ்ணமூர்த்தி(50), சக்திவேல்(40) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர வாகன சோதனை…. 163 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 2 பேரை கைது செய்த போலீஸ்…!!

புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பையில் 163 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(32) என்பதும், அவருடன் வந்தவர் ராஜபாளையத்தை சேர்ந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடற்பயிற்சி செய்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன் விரோதத்தால் வாலிபரை இரும்பு ராடால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தென்காசியை சேர்ந்த புகழேந்தி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது காந்திபுரம் ஜே.என் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு புகழேந்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் தினேஷ் இரும்பு ராடால் புகழேந்தியை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த புகழேந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் மோகன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்துள்ளார். இந்நிலையில் மோகன் அவரது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து நாராயணபுரம் பகுதியில் இருக்கும் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினர் இடையே மோதல்…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய கார்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் விசாரணை…!!

காரில் செம்மரக்கட்டைகளை கடத்தியவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லியூர் தரகப்பனூர் வட்டம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அதே வழியாக வந்த சொகுசு கார் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி மரத்தின் மீது மோதி நின்றது. உடனடியாக கார் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் 260 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

புல் அறுப்பதற்காக சென்ற விவசாயி…. பாம்பு கடித்து பலியான சோகம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமுட்டேரி பகுதியில் விவசாய மோகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மோகன் தனது மாடுகளுக்கு இரை போடுவதற்காக விவசாய நிலத்திற்கு சென்று புல் அறுத்துள்ளார். அப்போது திடீரென வந்த கட்டு விரியன் பாம்பு மோகனின் காலில் கடித்தது. இதனால் அவர் கட்டையால் அந்த பாம்பை அடித்துள்ளார். சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சக ஊழியருடன் வீட்டிற்கு சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து மோகனா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் குணசேகரன் என்பவரிடம் அந்த வழியாகத்தானே செல்கிறீர்கள் என்னை வீட்டில் இறக்கி விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் குணசேகரன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோழியுடன் தங்கியிருந்த சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த தம்பி…. போக்சோ சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் பார்த்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற பேருந்து…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களை பேருந்து மூலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருவர். மாலை நேரம் மீண்டும் அவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தொழிலாளர்களை அழைத்து வந்த பேருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. சென்னையில் பரபரப்பு…!!

இன்ஜினியர் பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் 29 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அசோக் நகர் மாநகராட்சி சுகாதார துறையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு இன்ஜினியரான பிரபாகரன் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐ.ஐ.டி-யில் வேலை பார்ப்பதாக கூறிய பிரபாகரனுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், 111 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடி வந்த வாலிபர்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் லட்சுமி அம்மாள் தெருவில் மனோகர் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 3-வது மாடியில் இருக்கும் அறைகளில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்து மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் வாலிபர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த லாரி…. டிரைவர்-கிளீனர் தப்பி ஓட்டம்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

லாரி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஜமீன் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் லாரி அருகே சென்று பார்த்தபோது ஓட்டுனரும், கிளீனரும் தப்பி ஓடினர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடிசை வீட்டிற்குள் புகுந்த லாரி…. கணவன்-மனைவி உள்பட 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

கட்டுபாட்டை இழந்த லாரி குடிசை வீட்டிற்குள் புகுந்த விபத்தில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மணல் லோடு ஏற்றுக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றது. அங்கு மணலை இறக்கிவிட்டு லாரி திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தென்னவராயன்நல்லூர் சாலை அருகே இருக்கும் குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தினமும் வருகிறது” ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் துள்ளி ஓடும் மான்…. பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்…!!

தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் மானை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக புள்ளிமான் ஒன்று தினமும் காலையில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்து செல்கிறது. அந்த புள்ளிமான் வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடி வருகிறது. இந்நிலையில் அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அருகில் சென்றாலும் அச்சமின்றி புள்ளிமான் சுற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிவேகமாக வந்த கார்…. தனியார் நிறுவன காவலாளி பலி…. விருதுநகரில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் கருப்பையா(65) என்பவர் ரவசித்து வந்துள்ளார். இவர் தனியார் நற்பாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா எட்டூர்வட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் கருப்பையா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இறந்த பிறகும் 4 பேரில் உயிரை காப்பாற்றிய வாலிபர்….. விழுப்புரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

விபத்தில் இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் கிராமத்தில் சரவணன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பரான சிபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் விளங்கம்பாடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சிபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரியில் இருக்கும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து…. காயமடைந்த 7 மாணவிகள்…. கோர விபத்து…!!

லாரி மீது கல்லூரி பேருந்து  மோதிய விபத்தில் 7 மாணவிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் விவேகானந்தா பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தமிழ்பரத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் பிருந்தா என்பவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்துள்ளார். பலமுறை தேர்வு எழுதியும் பிருந்தா தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பிருந்தா தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து பிருந்தாவை சாப்பிடுவதற்கு அழைக்க […]

Categories

Tech |