Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விலையில்லா சைக்கிள் வழங்கல்…. சிறப்பாக நடைபெற்ற விழா…. கலெக்டரின் செயல்….!!

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 37 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12,490 மாணவ-மாணவிகளுக்கு 6.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

வங்கி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கேட்டு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டி சமர்ப்பித்த கோரிக்கை சாசனங்கள் மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற கூட்டுறவு வாங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சம்பத் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோதனை தொடரும்…. ஆட்டோக்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் தகவல்….!!

விதிமுறைகளை மீறி இயங்கிய 15 ஆட்டோகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் இருசக்கர வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் அதிகாரிகள் அன்னதானப்பட்டி உள்பட 4 பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் உரிய பெர்மிட் இன்றி இயங்கியதும், தகுதி சான்றிதழ் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதை போல் பல புகார்களின் அடிப்படையில் விதிமுறைகளை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வலி…. ஆட்டோவில் பிரசவம்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்ராம்பட்டி பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாம்பரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நீலாம்பரி நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருந்துள்ளார். அதன்பின் நீலாம்பரி தன் தாய் வீட்டிற்கு வந்த போது திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடைய உறவினர் ஒருவர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் போது திடீரென […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்…. சிறப்பாக நடைபெற்ற விழா…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் மாணவ-மாணவிகளின் நடத்திய கலை நிகழ்ச்சிகளை அதிகாரிகள் கண்டு களித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவியாளர் தமிழ்வேந்தன், வருவாய் அலுவலர் ரம்யா தேவி, வேளாண்மை இணை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்குகளை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்துள்ளனர். இதில் மாணவர் மன்ற ஆலோசகர் விஜயகுமார் வரவேற்றுள்ளார். அதன்பின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அடக்கம் செய்ய மாட்டோம்” இரு தரப்பினர் இடையே தகராறு…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இருதரப்பினர் இடையே தகராறு இருந்ததால் இறந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாகாடு பகுதியில் 250-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இறந்தால் அருகில் இருக்கும் கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோரம் அடக்கம் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். இந்நிலையில் நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாட்களாக தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்….. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு நீதிபதி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மகேஷ் குமார் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து கிறிஸ்டோபர் ரயிலில் பட்டாபிராம் வந்து இறங்கியுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு செல்வதற்காக கிறிஸ்டோபர் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் கிறிஸ்டோபர் மீது மோதியதால் சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விரைவில் முகாம்…. கட்டாயம் கொண்டு வர வேண்டும்…. கலெக்டர் தகவல்….!!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 2-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்து கலெக்டர் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, அதிகாரம் வழங்கல் அமைச்சகம், மத்திய அரசின் சமூக நீதி மூலம் இம்மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்களுக்கும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்த தொழிலாளி…. திடீரென முட்டி தூக்கி வீசிய காட்டெருமை…. கோவையில் பரபரப்பு…!!

காட்டெருமை தாக்கியதால் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த காட்டெருமை மணிகண்டன் என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த கிளை…. பரிதாபமாக உயிரிழந்த மாணவன்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

நாவல் பழம் பறிக்க சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீனிமடை கிராமத்தில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கொம்புகாரனேந்தல் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது சில மாணவர்களுடன் சேர்ந்து மனோஜ் பள்ளிக்கு வெளியே சென்று நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விரைவில் தயார்…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. கலெக்டரின் ஆய்வு….!!

மனோராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து பணிகளையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபேந்திரராஜன்பட்டிணத்தில் மனோரா சுற்றுலா தளம் அமைந்திருக்கிறது. இந்த மனோரா சுற்றுலா தளம் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வாட்டர்லு என்ற இடத்தில் தோற்கடித்ததன் நினைவாக ஆங்கிலேயரின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி வெற்றியின் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது. இங்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ளவர்களும் மற்றும் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாளடைவில் சுற்றுலாத்தளமான மனோரா மிகவும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்…. வாலிபருக்கு அருவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோத காரணத்தால் வாலிபரை அருவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகர் பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் வின்சென்ட் தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆகாஷ் கையில் வைத்திருந்த அருவாளால் வின்சென்டை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த வின்சென்டை அக்கம்பக்கத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தனிநபர்கள் ஆக்கிரமிப்பு…. தொடர்ந்து போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏ.பி. நாடானூரில் 9 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கொடுத்த நிலத்தில் 2 பேர் நிலங்கள் தவிர மற்ற இடங்களை சிலர் போலி பட்டா மற்றும் பத்திரம் தயார் செய்து கிரையம் செய்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி அப்பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுனர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொத்தமல்லி கீழ அக்ரஹாரத் தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனது காரில் உறவினர் ஒருவருடன் பாபநாசம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது பழைய பேட்டை கிருஷ்ணாபேரி வழியாக சென்ற நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடி அமாவாசை திருவிழா…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்….!!

சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள இம்மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஆடி அமாவாசை நாளன்று நதியில் நீராடி காரையார் காணிக்குடியிருப்பில் வீற்றிருக்கும் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் சாமியை தரிசனம் செய்பவரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் கவனக்குறைவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. நிருபர்களுக்கு பேட்டி….!!

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தலைவர் விசாரணை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-டூ மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விசாரணை குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. பெற்றோர் புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இது பற்றி சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்போனில் மிரட்டல்…. கலெக்டர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொலைபேசியில் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க 2  தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக அம்ரித் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கலெக்டரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி உள்பட பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கலெக்டர் அம்ரித் காவல்துறை சூப்பிரண்டுஆஷிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். பின்னர் உடனடியாக இம்மாவட்டம் முழுவதும் இருக்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபத்து…. அதிகாரிகள் ஆறுதல்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு….!!

மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கத்தரிப்புலம் வரை மினி பேருந்து இயங்கி வந்துள்ளது. இந்த மினி பேருந்து வேதாரணத்தில் இருந்து 30-க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டு கத்தரிப்புலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது சந்தையடி பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு இருக்கும் வயலில் கவிழ்ந்துள்ளது. இதில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் அனுசியா, சவுமியா, பிரியதர்ஷினி, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. மதுரையில் பரபரப்பு….!!

விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள காவட்டுநாயக்கன்பட்டி-கூவலப்புரம் சாலையில் இருக்கும் கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் வசிக்கும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. இவர் எல்.எல்.பி படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலாஜி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தாய் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லடிவிளை சிவந்தமண் என்ற பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவர்களுடைய தாத்தா சந்திரன் பிரபாவின் வீட்டு திண்ணையில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து பிரபா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த வாலிபர்…. பெற்றோர் மனு தாக்கல்…. நீதிமன்றம் உத்தரவு….!!

சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்காத வழக்கில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாடகம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரில் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை செலுத்தவில்லை…. அறநிலைத்துறை ஆணையர்களுக்கு அபராதம்…. நீதிபதி உத்தரவு.‌…!!

கால தாமதத்திற்கான காரணம் அளிக்காததால் அறநிலைத்துறை ஆணையர்களுக்கு அபராதம் விதித்து நிதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள சூளையில் இருக்கும் சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமுடைய சொத்துக்களை குத்தகைக்கு எடுத்து தனிநபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சுகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலைத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேத்தியுடன் விளையாடி கொண்டிருந்த சிறுமி…. முதியவர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூரில் மணி(65) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீட்டிற்கு முன்பு பேத்தியுடன் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை மணி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து மணி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை அடுத்து சிறுமி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முதியவர் அடித்து கொலை…. இரட்டை சகோதரர்களின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

முதியவரை கொலை செய்த இரட்டை சகோதரர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டு காட்டு தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தண்டபாணி(54), ராமச்சந்திரன்(54) என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரட்டை சகோதரர்கள் ஆவர். கடந்த 2018- ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உறவினரான பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யாறு(75) என்பவர் இருவரையும் விலக்கி விட முயன்றுள்ளார். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை தேடி அலைந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் காளியப்பம்பாளையம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சபரி கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி கார்த்திக் பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூஜை பொருட்களை தூக்கி எறிந்து… அட்டகாசம் செய்த காட்டு யானைகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

காட்டி யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லமுடி எஸ்டேட் பூஞ்சோலை பகுதியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் இருக்கும் டீக்கடைக்குள் புகுந்தது. இதனை அடுத்து யானைகள் அங்கிருந்த பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூதாட்டிக்கு தைலம் தேய்த்த பெண்” பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அய்யாவு நகர் பகுதியில் பெத்தம்மா(90) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் உங்களது உடல் வலிக்கு தைலம் தேய்த்து விடவா என அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து…. காதலனின் வெறிச்செயல்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

இளம் பெண்ணே காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வீராட்சி குப்பம் கிராமத்தில் 26 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் மூர்த்தி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி கேரளாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது இளம்பெண் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் ஊருக்கு வந்த மூர்த்தி காதலியை பார்க்க சென்ற போது அவருக்கு திருமணம் ஆன தகவல் கேட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் காதல்…. ஏமாந்து போன மாணவி…. குற்றவாளியை தேடி வரும் போலீஸ்….!!

பள்ளி மாணவியின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் 16 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த போது அவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் இருந்துள்ளது. அதன்பின் அந்த மாணவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் தனது பள்ளி படிப்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்…. வழிமறித்த மர்ம கும்பல்…. சென்னையில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை 6 நபர்கள் சேர்ந்த மர்ம கும்பல் வழிமறித்துள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற வாலிபரை மர்ம கும்பல் விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிவிட்டனர். இதில் வாலிபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவு…. பரிதாபமாக உயிரிழந்த விலங்கு…. மருத்துவர்கள் கண்காணிப்பு….!!

19 வயதுடைய ஆண் வரி கழுதைப்புள்ளி உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பூங்காவை நாள்தோறும் பல ஊர்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வயதுடைய வெங்கட் என்ற ஆண் வரி கழுதை புலி உடல் நலக் கோளாறு காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்தது. இதற்கு பூங்கா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி…. போலீஸ் விசாரணை…!!

ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை புது தெருவில் கட்டிட தொழிலாளியான ஸ்ரீதர்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்த பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு அடி-உதை…. பரபரப்பு சம்பவம்…!!

சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பெண் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து நிலையம் அருகே சிலர் மது குடித்துவிட்டு போதையில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பென்னாகரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் குடிபோதையில் இருந்த முதியவரை அடித்து உதைத்துள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததால் அந்த முதியவர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னபாப்பா(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனைக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பேருந்து மூதாட்டி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தை நிறுத்திய போலீசார்…. வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காளிகுளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் இருந்து பெருந்துறைக்கு தக்காளி ஏற்றி செல்வதாக விவேக் தெரிவித்துள்ளார். இதனால் தார்ப்பாயை அகற்றி தக்காளியை காட்டுமாறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் உள்பட 3 பேர் படுகாயம்…. திருச்சியில் கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் கலைவாணர் தெருவில் சபரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான அகஸ்டின்(29) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அகஸ்டின் ஐ.டி நிறுவன ஊழியரான விவேக்(29), அவரது அண்ணன் பிரவீன்(33) ஆகியோருடன் நண்பர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். பின்னர் நண்பரை பார்த்து விட்டு அவர்கள் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் படுத்திருந்த புலி…. வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள்….அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஏரிக்கரையில் புலி படுத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பது வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பவுத்தூர் அருகே இருக்கும் ஏரிக்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது மறுகரையில் புலி ஒன்று படுத்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிலர் புலியை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே காட்டெருமை உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இதனை அடுத்து காட்டெருமை சாலையில் உலா வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 1 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செலக்கரிசல் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிராம் பாரிக்(38) என்பது தெரியவந்தது. இவர் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கிராம் பாரிக்கை கைது செய்தனர். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளை தற்கொலை…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் முத்துக்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கு காவியா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது காவியா 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை 67-வது வார்டு ராம்நகர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை தனக்கு முன்பு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகனின் சடலத்துடன் 3 நாட்கள் இருந்த மூதாட்டி…. நடந்தது என்ன….?? கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

தற்கொலை செய்து கொண்ட மகனின் சடலத்துடன் தாய் 3 நாட்கள் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் வள்ளி நகரில் சுப்பிரமணியம்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட வசந்தா என்ற தாய் இருந்துள்ளார். நேற்று முன் தினம் சுப்ரமணியத்தின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்துடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி…. ஆசிரியரிடம் கூறிய அதிர்ச்சி உண்மைகள்…. போலீஸ் அதிரடி…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 16 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கூறிய தகவலை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சடைந்தனர். அதாவது மாணவியின் தாயார் கடைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்த மாணவன்…. பேருந்து மீது மோதி பலியான சோகம்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீதி மோதிய விபத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தனூரில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கவியரசு(16), தமிழரசு(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசு 12-ஆம் வகுப்பும், தமிழரசு 10-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் கவியரசு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு பள்ளியில் இருந்த தனது தம்பியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டின் மேற்கூரையை உடைத்து…. அட்டகாசம் செய்த சிங்கவால் குரங்குகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வீட்டின் மேற்கூரையை உடைத்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் அரிய வகை குரங்கினமான சிங்கவால் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று காலை ரொட்டிக்கடை பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சிங்கவால் குரங்குகள் நுழைந்தது. இந்த குரங்குகள் கட்டிட தொழிலாளியான சுரேஷ்குமார் என்பவரது வீட்டு மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் சமையலறையில் இருந்த உணவுப் பொருட்களை தின்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவரின் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் தந்தை உடல் நல குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய 42 வயது நண்பரான அபுதாகிர் என்பவருக்கும் சிறுமிகளின் தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அபுதாகிர் சிறுமிகளின் வீட்டில் தங்க தொடங்கினார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அபுதாகிர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பெண்களின் புகைப்படங்களை அனுப்பி மோசடி” சிறுவன் உள்பட 2 பேர் கைது…. கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

பண மோசடி செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் காவலாளியாக இருக்கிறார். இந்நிலையில் ஒரு சில வாலிபர்கள் அந்த காவலாளியிடம் சென்று சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்த்த காவலாளி இதில் உள்ள பெண்கள் யாரும் இங்கு குடியிருக்கவில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும், பாப்பாவும் செல்கிறோம்” திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை…. சென்னையில் பரபரப்பு…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இந்துமதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடத்த 5 மாதங்களுக்கு முன்பு இந்துமதிக்கு குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்துமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மாமியார் துன்புறுத்தியதால் கடந்த 1 1/2 மாதத்திற்கு முன்பு இந்துமதி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் இந்துமதியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது கணவரும், மாமியாரும் […]

Categories

Tech |