நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேவன் கொட்டாய் என்ற பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சிலம்பரசனுக்கு கமலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சிலம்பரசன் தும்பல அள்ளி அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணைக்குள் இருந்து மண் எடுத்து வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த […]
