கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூராம்பட்டியில் தண்ணீர் பந்தல் முனியப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 29ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரண்டு வாலிபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையம் புகார் […]
