சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டியை சார்ந்த செந்தில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். செந்தில் கடந்த 30ஆம் தேதி தோகைமலை சென்று விட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் கிருஷ்ணம்பட்டி அருகில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் செந்திலின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செந்தில் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
