நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொளுத்தினிபட்டியில் சேகர்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரீத்தி(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் பிரீத்தி தோல்வி அடைந்தார். இந்நிலையில் வேங்காம்பட்டியில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி பிரீத்தி நீட் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த மாதம் பிரீத்தி நீட் […]
