Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“செல்போனில் வந்த ஆபாசபடம்” மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாச படம் அனுப்பிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருக்கும் விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு பாலசுப்பிரமணி(42) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணி விடுதியின் வருகை பதிவேட்டில் இருந்து ஒரு மாணவியின் செல்போன் என்னை எடுத்துள்ளார். இதனை அடுத்து பாலசுப்பிரமணி அந்த மாணவியின் செல்போன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடடே….!! 50 வயதுடைய தந்தைக்கு காதணி விழா நடத்திய மகன்கள்…. நிறைவேறிய ஆசை…!!

சிறுவயதில் இருந்தே தொழிலாளிக்கு நிறைவேறாத ஆசையை அவரது மகன்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்படை கிராமத்தில் விவசாயக் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வேடியப்பன்(22), மணி(20) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏழுமலை ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இதனால் ஏழுமலையின் பெற்றோர் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தாமல் இருந்துள்ளனர். இதனை ஏழுமலை தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செடிகளுக்கு இடையே கிடந்த சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பெரும் சோகம்…!!

அரசு பேருந்து ஓட்டுநர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் பேருந்து ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கும் ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த உறவினர்களும், தீயணைப்பு வீரர்களும் முருகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சுத்தமலை பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் செடியின் நெடுக்கில் முருகனின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற தொழிலாளர்கள்…. சரக்குவேன் கவிழ்ந்து இளம்பெண் பலி; 16 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சரக்கு வாகனம் கார் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் பலியான நிலையில், 16 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுகொத்துக்காடு பகுதியில் வசிக்கும் 16 கட்டிட தொழிலாளர்கள் ராஜன் நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு சரக்கு வேனில் சென்றுள்ளனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் தொழிலாளர்கள் அதே வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை சல்மான் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாண்டம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பாமணி ஆற்றின் கீழ் கரையில் அக்கரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் ஆண்டுதோறும் இந்த கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. எனவே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய மகிமை திருவிழா….. கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான திருச்சிலுவைநாதர் ஆலயத்தில் 443-வது மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் தலைமையில் திருப்பலி நடந்ததையடுத்து ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பங்குத்தந்தைகள் மனோ, ஜான் சுரேஷ், டென்னிஸ் வாய்ஸ், சில்வஸ்டர், டிமெல், பாலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பதினோரு நாட்கள் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ஆம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை… இரவில் தணிந்த வெப்பம்…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் இரவு 10.15 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஈரோடு பேருந்து நிலையம், பெருந்துறை ரோடு, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், மேட்டூர் ரோடு, சக்தி ரோடு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் ஆகிய பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. 2000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி நாசம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டதால் 2000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக இறந்தன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாமரைகோழியம்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஸ்வநாதன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பண்ணையில் பற்றி எரிந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ரவுடியின் தம்பி உள்பட இருவர் கைது…!!

அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மத்திய சிறையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உதவி சிறை அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மத்திய சிறை அருகே இருக்கும் உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி மணிகண்டன் சொந்த வேலை காரணமாக கும்பகோணம் சென்று விட்டார். கடந்த 28-ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் மணிகண்டனின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் நிறுத்த திட்டம்” கடற்படை அதிகாரிகளின் அறிவிப்பு…!!

விக்ராந்த் போர்க்கப்பலை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே கட்டப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிய போர்க்கப்பலை கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நாட்டுக்காக அர்ப்பணித்து வைத்துள்ளார். இந்த கப்பல் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலத்தில் கடலில் செல்லும் போது மிதக்கும் தீவு போல காட்சி அளிக்கும். இந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான்கு வருட காதல்…. பட்டதாரி பெண்ணின் துணிச்சல் செயலால்…. கைகூடிய திருமணம்….!!!!

பெண் ஒருவர் வாலிபரை போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரண் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஒலிபெருக்கி நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவரும் வீர சோழபுரத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகளான நந்தினியும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தினியிடம் கரண் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் நெருங்கி பழகி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்…. மூடப்பட்ட “நம்ம சென்னை” செல்பி மேடை…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…..!!!!

“நம்ம சென்னை” செல்பி மேடை மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த பாதையானது மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை சுமார் 26 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வது வழித்தடமாக அமைய இருக்கிறது. மேலும் இந்த வழித்தடம் சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதைகள் மூலம் அமைக்கப்பட உள்ளது. இதனால் கலங்கரை விளக்கம் முதல் “நம்ம சென்னை செல்பி” மேடை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சோழர்களின் கலையை பின்பற்றி…. யானை தந்தத்தினாலான சிற்பம்…. அரியலூரில் மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு….!!!!

யானை தந்தத்தினால் செய்யப்பட்ட சிற்பத்தின் பாகம் கிடைத்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகில் மளிகை மேடு பகுதியில் தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மார்ச் 25ஆம் தேதி மண்ணால் ஆன கெண்டி செம்பின் மூக்கு பகுதி, பழங்கால மண் பானை மற்றும் 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த வீட்டு மின்சாதன பொருட்கள்…. பரிதாபமாக இறந்த மாடு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் விவசாயியான மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதால் மாதேஷ் வளர்த்த ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் மாதேஷின் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாயை அழைப்பதற்காக சென்ற மகன்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி எல்.என் புரத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜ்குமார், ராஜ்கமல்(30) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ராஜ் கமல் பெங்களூருவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு ராஜ்கமலுக்கு குணசுந்தரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் விஜயலட்சுமியும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேபிள் இணைப்பை சரி செய்ய சென்ற ஊழியர்….. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் நிறுவன ஊழியருக்கு இரண்டரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லனுர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சரவணன் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டு கேபிள் டிவி இணைப்பை சரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பிராங்க் வீடியோ எடுப்பதற்கு தடை” மாநகர போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, சமீப காலமாக பிராங்க் வீடியோ என்ற பெயரில் பலர் பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற இடங்களில் குறும்பு தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனை தொழில் முறை ரீதியாக யூடியூப் சேனலில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் சில வீடியோக்களில் நடிப்பவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேற லெவல்….!! 3 வயதிலிருந்து சாதனை படைத்த சிறுவன்…. குவியம் பாராட்டுகள்….!!

வேதியியல் தனிம அட்டவணையை 1 நிமிடம் 33 வினாடிகளில் கூறி 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகவும், புற்றுநோய் சிறப்பு நிபுணருமாக பிரபுராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பல் மருத்துவரான ஆர்த்தி ஹரிபிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதுர்கிரிஷ் ஆத்விக்(6) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு சிறுவயதில் இருந்து தமிழ் மீது மிகுந்த ஆர்வம். இதனால் 3 வயதில் 53 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை-செங்கோட்டை ரயில் ரத்து…. ரயில்வே கோட்ட அலுவலகத்தின் அறிவிப்பு…!!

ராஜபாளையம் சங்கரன்கோவில் இடையே ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் செங்கோட்டையில் இருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை- மதுரை(06664) மற்றும் மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை (06663) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நாளை முதல் வருகிற 10-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மைசூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பண்டிகை காலத்தில் கட்டுப்படுத்தும் பொருட்கள் மைசூரு- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் வருகிற 7-ஆம் தேதி மைசூரு- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்(06201) மதியம் 12:15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு திருநெல்வேலிக்கு வருகிறது. பின்னர் 4:35 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது. மற்றொரு மார்க்கத்தில் வருகிற 8-ஆம் தேதி சிறப்பு ரயில் மதியம் 12:45 மணிக்கு திருவனந்தபுரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாடகை கேட்டது குத்தமா” வீட்டு உரிமையாளருக்கு வந்த சோதனை…. போலீஸ் அதிரடி….!!

வீட்டு உரிமையாளரின் கையை கடித்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் மங்களேரி பகுதியில் கமலாபாய்(68) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகராஜ்(37) என்பவர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இந்நிலையில் திலகராஜ் வாடகை பணத்தை சரியாக கொடுக்கவில்லை. இதனை கமலாபாய் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த திலகராஜ் கமலாபாயின் கையை கடித்ததோடு, வீட்டிலிருந்த குக்கர் முடியால் கமலபாயின் தலையில் தாக்கிவிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரியாணியால் வந்த வினை” ஹோட்டல் ஊழியருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

ஹோட்டல் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேடு மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் ஒரு பிரியாணி கடை அமைந்துள்ளது. இந்த கடையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான்(50) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடைக்கு வந்த ஒருவர் 90 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளார். அதற்கு முகமது உஸ்மான் பிரியாணி பார்சல் 100 ரூபாய் எனவும், 90 ரூபாய்க்கு தர முடியாது எனவும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…. இப்படியா நடக்கணும்…. விநாயகர் சிலை ஊர்வலத்தில்…. பலியான பள்ளி மாணவன்….!!!!

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன்  பலியாகியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு திலீப் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் விநாயகரை எடுத்துச் செல்லும் வாகனத்தில் திலீப் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேங்கி நின்ற மழை நீர்…. கசிந்து கொண்டிருந்த மின்சாரம்…. பலியான பெண்….!!!!

தேங்கி நின்ற மழை நீரில் கசிந்த மின்சாரத்தால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்வம்-உமாராணி தம்பதியினர். இந்நிலையில் உமாராணி நேற்று இரவு அருகில் உள்ள கடைக்கு மளிகை வாங்குவதற்காக 2வது தெருவுக்கு சென்றுள்ளார். அந்த தெருவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை மழையால் மழை நீர் தேங்கி நின்றுள்ளது. இந்த மழை நீரில் துரதஷ்டவசமாக அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது குறித்து அறியாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துராங்கப்பா…. 15 1/2 கோடி சுருட்டிய மோசடி மன்னனை…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

ரூபாய் 15 1/2 கோடி சுருட்டிய மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் ரூபாய் 15 1/2 கோடி மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் இன்ஜினியரிங் கல்லூரி வளர்ச்சிக்காக ரூபாய் 200 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி சுமார் 15 1/2 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் புதிய கமாண்டெண்ட் நியமனம்…. வாழ்த்தும் அதிகாரிகள்….!!

ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டெண்டாக வீரேந்திர வாட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இருக்கும் வெல்டிங்டெனில் ராணுவ பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளுக்கும், இந்தியாவின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் கல்லூரியின் கமாண்டெண்டாக பதவி வகித்த லெப்டினென்ட் ஜென்ரல் மோகன், தென் சூடான் நாட்டில் இருக்கும் ஐ.நா சபை அமைதிப்படை தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ராணுவ பயிற்சி கல்லூரி கமெண்டெண்டாக ஜெனரல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி பேருந்து மீது மோதிய லாரி….. 41 மாணவர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 41 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் விருதாச்சலத்தில் இருந்து கல்லூரி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து விருதாச்சலம்- வேப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாணவர்களை ஏற்றுவதற்காக சாத்தியம் கிராமத்தில் நின்றது. அப்போது வேப்பூர் நோக்கி வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர்கள்…. பின் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த மூதாட்டி உட்பட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் மேட்டுக்காடு பகுதியில் இருக்கும் தோட்டத்தில் சின்னமணி என்பவர் விவசாய பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்து கிணற்றிற்கு அருகில் இருந்த பம்பு செட்டில் மின் மோட்டாரை இயக்க முயன்றபோது சின்னமணி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மூதாட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் குதித்து கயிற்றைப் பிடித்து மேலே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளிரில் நடுங்கிய 70 வயது மூதாட்டி…. சப்-இன்ஸ்பெக்டரின் செயல்…. குவியும் பாராட்டுகள்…!!

குளிரில் நடுங்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்ட சப்-இன்ஸ்பெக்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையம் அருகே சாலையோர நடைபாதையில் குளிரில் நடுங்கியவாறு மூதாட்டி ஒருவர் படுத்து கிடந்துள்ளார். இதனை பார்த்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் என்பவர் சுமார் 70 வயதுடைய அந்த மூதாட்டியை மீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய காட்டெருமை…. 4 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் பெரிய வண்டிசோலை பகுதியில் இருக்கும் தனியார் தேவை தோட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்காக வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அங்கு தற்காலிக கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டெருமை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கம்…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது. விழுப்புரம்-தாளநல்லூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த பாதை வழியாக செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(வ.எண்.16127) வருகிற 7-ஆம் தேதி மட்டும் விழுப்புரத்தில் இருந்து விருதாச்சலத்திற்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. அதாவது விழுப்புரத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று அங்கிருந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேக்கு மரத்தை கோவிலுக்கு வழங்கிய பக்தர்…. 4 ஆண்டுகளாக வீணாக கிடக்கும் அவலம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கொடிமரம் அமைப்பதற்காக வழங்கிய தேக்கு மரம் 4 ஆண்டுகளாக வீணாக கிடப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தோப்புத்துறையில் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ராமாயணம் காலத்திற்கு முன்பே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள திருமாலை ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு வழிபட்டதாகவும், கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 25 ஆம் ஆண்டு கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது கொடிமரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த…. தென் மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள்….. முழு விவரம் இதோ…!!

மதுரை வழியாக இயக்கப்படும் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸில் இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. மேலும் குருவாயூரிலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸிலும் வருகிற 12-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. இதனை அடுத்து மதுரை வழியாக இயக்கப்படும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மிகவும் ஆபத்தான எறும்புகள்” விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கரந்தமலை அடிவார தோட்டங்களில் இருக்கும் செடி, கொடிகளில் விஷ எறும்புகள் இருக்கிறது. இதனால் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கரந்தமலை பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வகை எறும்புகள் மிகவும் அபத்தானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாழடைந்த கிணற்றில் மனித எலும்புக்கூடு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

பாழடைந்த கிணற்றிலிருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டி.வி.டி காலனி செந்தூரன் நகரில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு இருக்கிறது. இந்த கிணறு தற்போது குப்பைகள் நிறைந்து பாழடைந்து காணப்படுவதால் கழிவு நீரும் தேங்கி கிடைக்கிறது. நேற்று கிணற்றில் மனித எலும்புக்கூடு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நான் வர மாட்டேன்” பேருந்துக்கு அடியில் படுத்து கொண்ட நபரால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பேருந்துக்கு அடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் படுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுபாலப்பட்டியில் இருந்து சங்கராபுரம் வழியாக டவுன் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு நபர் திடீரென பேருந்தின் முன்பு உருண்டு சென்று பேருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டதை பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து பேருந்து ஓட்டுநரும் பயணிகளும் அந்த நபரை வெளியே வருமாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை…. கலெக்டரின் ஏற்பாடு…. மாற்றுத்திறனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

செல்போன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், வங்கி கடன்கள், அரசு பணி கோருதல், மாதாந்திர உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 97 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு 11,55,000 ரூபாய் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

50-க்கும் மேற்பட்ட கிராமங்கள்….. வெள்ளப்பெருக்கில் உடைந்த தரைப்பாலம்…. அவதிப்படும் மலைவாழ் மக்கள்…!!

காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைபாலம் உடைந்து கிராமங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதால் பேரிடர் மீட்பு குழுவினர் ஆயத்தமாக உள்ளனர். இந்நிலையில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தரைப்பாலம் உடைவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 அரசு பேருந்துகள் ஜப்தி…. ஏன் தெரியுமா….?? நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் கிராமத்தில் கூழி தொழிலாளியான கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி விபத்தில் கருப்பன் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோபி சார்பு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 4,71,982 ரூபாய் கருப்பனுக்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்ட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்…. நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு…!!

வாட்ஸ்அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கு குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறைபாடுகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7397392682 (நகராட்சி பொறுப்பாளர்), 7397392681 (ஆணையாளர்), 9380403604 (துப்புரவு அலுவலர்) ஆகியோரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணில் புகார்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய போலீசார்…. நள்ளிரவில் உலா வந்த காட்டு யானை…. வனத்துறையினரின் போராட்டம்….!

காவல் நிலையம் அருகே காட்டு யானை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனை பார்த்ததும் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. காயமடைந்த 16 பேர்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது, இந்த பேருந்து புதுக்கோட்டை- காரைக்குடி சாலை கம்மாசட்டி சத்திரத்தில் சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்தனர். மேலும் விபத்தில் பேருந்துகளின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதுகுறித்து அறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. அத்துமீறி நுழைந்த வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமடல் பகுதியில் தனபால்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனபால் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தனபாலை கைது செய்தனர். இந்த வழக்கினை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவி அளித்த புகார்…. சினிமா உதவி இயக்குனர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாதாண்டகுப்பம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா துறையில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன் திரும்பி வரவில்லை. இதனால் சந்திரனின் மனைவி சரஸ்வதி தனது கணவரை காணவில்லை என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிக்கு சொந்தமான இடம்…. தனிநபர் செய்த காரியம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து அதிகாரிகள் மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஏலமன்னா பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் தனி நபர் ஒருவர் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி செய்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அம்ரித், கூடலூர் ஆர்.டி.ஓ சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி அதிகாரிகள் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தனர். அப்போது 7 சென்ட் நிலம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த மாடுகள்…. உடல் கருகி இறந்த சோகம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வைத்தியநாதபுரம் செல்லும் சாலை அருகே கோவிந்தனின் பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர் கண்ணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியில் சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கோபியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் சஞ்சய் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த ஈரோடு சைல்ட் லைன் ஆலோசகர் தீபக்குமார் காவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

ரயில் அடிபட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஆணின் சடலம் கடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் புதுப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து…. கல்லூரி மாணவிகள் உள்பட 22 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 22 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் கல்லூரி மாணவிகள் உள்பட 22 […]

Categories

Tech |