Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர் கோவில் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாரியப்பன் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய்க்குட்டியை தேடிய பெண்கள்….. ஆக்ரோஷமாக துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

இரவு நேரத்தில் கரடி ஆக்ரோஷமாக பெண்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் மகாத்மா காந்தி காலணியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாரின் பக்கத்து வீட்டினரின் நாய் குட்டி காணாமல் போனது. இதனால் முத்துக்குமாரின் மனைவி சுப்புலட்சுமி, பக்கத்து வீட்டுப் பெண்கள் இணைந்து நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு நாய்க்குட்டியை தேடியுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த பெரிய கரடி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

போலியான ஆவணங்களா….?? நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!

நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயிரப்பேரியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்நிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து சோமசுந்தர பாரதி என்பவருக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பதாக கண்ணன் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பத்திரப்பதிவு செய்து கொடுத்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நோவா சாதனை படைத்த கல்லூரி மாணவர்….. குவியும் பாராட்டுகள்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறையூரில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோசப் கல்லுாரி பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆகாஷ் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நோவா சாதனை பதிவுக்காக 1 நிமிடத்தில் 77 முறை சிட்-அப்ஸ் செய்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலையில் நடைபெற்ற சாதனை நிகழ்வுக்கு பிறகு ஆகாஷுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து….. ஆட்டோ ஓட்டுநர் பலி; 3 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!!

ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வடக்கூர் அம்மன் கோவில் தெருவில் முருகன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 4 மாதமே ஆன மாதேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலை தொடர்பாக குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற முருகன் மீண்டும் வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்த ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குரூப் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்….. பதிவு செய்வது எப்படி….?? மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 20,000 பணியிடங்களுக்கான உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், உதவி ஆய்வாளர் போன்ற பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சமைக்காமல் செல்போன் பயன்படுத்திய மனைவி” காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…..!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி(27) என்ற பெண்ணை சிவகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற சிவகுமார் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உணவு சமைக்காமல் செல்போன் உபயோகித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” காவல் உதவி எண்ணில் புகார் அளித்த பெண்….. போலீஸ் நடவடிக்கை….!!!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது பெண் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினன்குடி பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அப்போது எனக்கு வீரமணி என்பவர் அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 55 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். ஆனாலும் அவர் வேலை வாங்கி தராமல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்த உதவிய பெண்….. கொத்தனார் செய்த காரியம்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 40 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் கொத்தனாரான வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். சாமியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் கவிதா(37) என்பவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு வினோத் கவிதாவின் உதவியுடன் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2-வது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவர்….. சென்னையில் பயங்கர சம்பவம்….!!!

2-வது மனைவியின் உடலில் கணவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காத்பாடா பகுதியில் ஷாஜகான்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தோல் கடையில் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார் b இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹசினாபேகம்(37) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி காலை ஹசினாபேகம் படுக்கையறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. தடுப்பணையில் மூழ்கி சிறுவன் பலி…. கதறும் பெற்றோர்….!!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டவுன்ஹால் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் நவீன் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் முண்டந்துறை தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கிதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை […]

Categories
ஆன்மிகம் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற அரங்குளநாதர் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை…..!!!

திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளத்தில் புகழ் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையடுத்து திருவிளக்கு பூஜையில் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தசரா திருவிழாவின் 6-ஆம் நாள்….. மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் முத்தாரம்மன் பவனி….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தசரா 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழாவிற்கான அனைத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சித்திரவதை செய்த கணவர்….. இளம்பெண் சாவில் சந்தேகம்…. பரபரப்பு சம்பவம்…..!!!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எல்புடையாம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான கோபி(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஆட்டியானூர் கிராமத்தில் வசித்த புஷ்பவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபி அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக பரவும் காய்ச்சல்…. வீடுகளுக்கே செல்லும் போலி மருத்துவர்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா…..??

தமிழ்நாடு முழுவதும் டெங்கு வைரஸ், மலேரியா, இன்சூரன்ஸ் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 100-க்கும் மேற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதில் தீவிர நோய் தொற்று இருக்கும் 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பிளியம்பட்டி, கோபால்பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வருகிற 4-ஆம் தேதி முதல்….. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென்மேற்கு ரயில்வே பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மைசூர்-தூத்துக்குடி, எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி ஆகிய மார்க்கம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயில்(06565) வருகிற 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் மதியம் 12:45 மணிக்கு எஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மற்றொரு மார்கத்தில் திருநெல்வேலி- எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில்(06566) 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் காலை 10:40 மணிக்கு திருநெல்வேலியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓசி டிக்கெட் வேண்டாம்” பணத்தை வாங்குமாறு அடம் பிடித்த மூதாட்டியால் பரபரப்பு….. வைரலாகும் வீடியோ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து பாலத்துறையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வால்பாறையில் வசிக்கும் வினித் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் குரும்பபாளையம் பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டியான துளசியம்மாள் என்பவர் பேருந்தில் ஏறி பாலத்துறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இலவச டிக்கெட்டை கண்டக்டர் துளசியம்மாளிடம் கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டி கண்டக்டரரிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே கண்டக்டர் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். எனவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை(Oct-2)….. கோவை மாநகராட்சியில்….. இந்த கடைகள் திறப்பதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!

கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 2-ஆம் தேதி(நாளை) காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு நாளை கோழி, ஆடு மற்றும் மாடுகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை திறக்க கூடாது. மேலும் நாளை கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் போத்தனூர், சக்தி ரோடு, உக்கடம் மற்றும் துடியலூர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து….. 2 பேர் பலி; 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

தீ விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாட்டாக நினைத்த நண்பர்கள்…. ஐடிஐ மாணவருக்கு நடந்த விபரீதம்….. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

ஐடிஐ மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறையில் பழங்குடியின மக்களுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தர்மபுரியை சேர்ந்த பிரவீன் குமார்(18) என்பவர் படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று காலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் பெருஞ்சூர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புதைமணலில் சிக்கிக்கொண்ட பிரவீன் குமார் காப்பாற்றுமாறு கையை உயர்த்தியுள்ளார். அவரது நண்பர்கள் விளையாட்டாக கையை காட்டுவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தலையில் கல்லை போட்டு கணவர் கொலை…. மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்….. போலீஸ் விசாரணை….!!!

போதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உரியூர் பகுதியில் சீராளன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சவுண்டு சர்வீஸ் நடத்தி வந்துள்ளார். இவருக்கு சோபனா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீராளனுக்கும், அவரது மனைவிக்கும்படி அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த அரசு பள்ளியின் மேற்கூரை….. 2 மாணவர்கள் காயம்…. பெற்றோரின் குற்றச்சாட்டு….!!!

பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி பகுதியில் இருக்கும் தாலுகா அலுவலகம் எதிரே பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சேரன்மாதேவி, கூனியூர், பத்தமடை, புதுக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்பிரிவு அறையின் மேற்கூறையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததை பார்த்து மாணவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கணவர், மகனை இழந்து தவிக்கும் பெண்”…. அதிகாரியின் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!!

அதிகாரியின் காரை வழிமறித்து பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு நகரத்தெருவில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு மேகலாவின் கணவர் சுதாகர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது மகனும் கடந்த 2017-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி பலியானதால் மேகலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகலாவுக்கு சொந்தமாக சிதம்பரபுரத்தில் இருக்கும் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேகலா அதிகாரிகளிடம் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முறையான சிகிச்சை வழங்கவில்லை” மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், சாருமதி(16) என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் இறந்து விட்டதால் சுகுணா கூலி வேலைக்கு சென்று தனது மகளை படிக்க வைத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி மாணவி வயலுக்கு சென்றுள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சாக்லேட் தருவதாக ஏமாற்றிய முதியவர்” 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருங்குறுக்கை கிராமத்தில் நடராஜன்(73) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 2018- ஆம் ஆண்டு கடைக்கு சாக்லேட் வாங்குவதற்காக 6 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நிறைய சாக்லெட்டுகள் தருகிறேன் எனக்கூறி நடராஜன் சிறுமியை கடைக்கு பின்புறம் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுத்தையுடன் போராடிய தொழிலாளி….. தேயிலை தோட்டத்தில் நடந்த சம்பவம்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!

சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தொழிலாளியான சின்ன முருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் 44 நம்பர் தேயிலை தோட்டத்தில் செடிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென வந்த சிறுத்தை சின்ன முருகன் மீது பாய்ந்து அவரை தாக்க முயன்றது. அப்போது முருகன் கூச்சலிட்டபடி சிறுத்தையுடன் போராடியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி” குவியும் சுற்றுலா பயணிகள்…..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், சாலக்குடி ஆற்றில் பாய்கிறது. மேலும்  அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரை பார்ப்பதற்காக ஏராளமான  சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று புகைப்படம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் தவறி விழுந்ததாக நாடகம்” நண்பர்களின் வெறிச்செயல்….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கட்டிட தொழிலாளியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்தன்(22) அவரது நண்பர்களான பிரசாந்த்(23), சீனிவாசன்(25), சக்திவேல்(25) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக ஆனந்தன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிரோடு தீ வைத்து எரித்த கணவர்….. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…..!!!

நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவர் மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் சன்னதி தெருவில் சிவராமன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவலட்சுமி(42) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் மாவு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜீவலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சிவராமன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஊழியர்….. அலறி சத்தம் போட்ட கல்லூரி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!!

விடுதிக்குள் நுழைந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயநகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஸ்ரீகாந்த்(22) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மயக்கவியல் படிப்பில் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் போதைக்கு அடிமையான ஸ்ரீகாந்த் தற்போது கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து ஸ்ரீகாந்த் அங்குள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு பாலியல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு….. உடன்கட்டை ஏறிய காதல் மனைவி….. தொல்லியல் ஆராய்ச்சியாளரின் தகவல்…..!!!

14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் மற்றும் உடன்கட்டை ஏறிய சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மயிலேறிபாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாம்பு கடித்து இறந்த வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4 அடி உயரமுடைய நடுகல் ஆகும். இதுகுறித்து கோவை தொல்லியல் ஆராய்ச்சியாளர் தமிழ் மறவன் ரமேஷ் கூறியதாவது, இந்த வீரன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் அவரது காதல் மனைவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெலிவரி செய்த மாணவன்….. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்….. சென்னையில் பரபரப்பு….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் பாலாஜி ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்துவிட்டு பாலாஜி மொபட்டில் இரவு நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி போல வாழ்ந்த காதலர்கள்….. தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது….. போலீஸ் அதிரடி….!!!

இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சம்பக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பக் திருமணம் செய்து கொள்ளாமலே தனது 33 வயது காதலியுடன் கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ.4 1/2 லட்சம் மோசடி…. குடும்பத்துடன் வந்து புகார் அளித்த லாரி ஓட்டுநர்….. போலீஸ் விசாரணை….!!

ஏல சீட்டு பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுநர் தனது குடும்பத்துடன் வந்து புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுஇடையம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பாஸ்கர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கணியம்பாடி பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் இணைந்து மாத ஏல சீட்டு நடத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து…. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 32 பேர்…. கோர விபத்து….!!

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடிமோழியனூரில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை அய்யனார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் ரவி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 50 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலகிராமம் வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளக்காதலி எரித்து கொலை…. வியாபாரியின் பரபரப்பு வாக்குமூலம்….. போலீஸ் விசாரணை….!!!

ஜவுளி வியாபாரி கள்ள காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஜவுளி வியாபாரியான ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திலகவதி(38) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் ரமேஷ் திலகவதியை தனிமையில் சந்திப்பதற்காக முள்ளிபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமேஷை பார்ப்பதற்காக திலகவதி அங்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மின்கசிவால் ஏற்பட்டதா….?? அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய்-மகன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடி பஜனை கோவில் தெருவில் ரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாயும் மகனும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனை அடுத்து மதியம் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆட்டை இழுத்து சென்ற விலங்கு…. அச்சத்தில் கிராம மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!

சிறுத்தை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை நாசம் செய்கிறது. இந்நிலையில் கல்லப்பாடி தோனிக்கான் பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை ஆட்டை கவ்வி இழுத்து சென்றது. இதனை அடுத்து ஆட்டின் அலறல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவர்கள் இப்படி செய்தால்….. பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு சொல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர். இதனை கண்டிக்கும் ஓட்டுநர்கள், மற்றும் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறியதாவது, பேருந்து படிக்கட்டுகளில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதனையும் மீறி சில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் இதை செய்யக்கூடாது…… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பொது இடங்களில் நின்று புகை பிடிப்பவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா பொது இடங்களில் புகை படிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள், உணவு விடுதி, மருத்துவமனை வளாகம், பேக்கரி உள்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகை பிடிப்பதற்கு அனுமதிக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நுழைந்த வாலிபர்….. திருடன் என நினைத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்….. பரபரப்பு சம்பவம்…!!!

நள்ளிரவு நேரத்தில் ஒருவர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி நகராட்சியில் க.புதூரில் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் அத்துமீறி நுழைந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வந்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் நின்றிருப்பதை கண்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி” பஞ்சாயத்து துணை தலைவியின் புகார்…. போலீஸ் அதிரடி….!!!

பஞ்சாயத்து துணை தலைவியின் கையெழுத்தை போலியாக போட்டு 9 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே இருக்கும் பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மாரியம்மாள் துணைத்தலைவியாக இருக்கிறார். இவர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது கணவர் காளிராஜ், பஞ்சாயத்து செயலாளர் சீனியம்மாள் ஆகியோர் தனது கையெழுத்தை போலியாக போட்டு ‘செக்’ மூலம் வங்கியிலிருந்து 9 லட்ச […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே தகராறு….. ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த கொடூரம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் திருமலை பகுதியில் செல்வம் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியமங்கலம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு காந்தி மார்க்கெட் பால்பண்ணை அருகே உள்ள மதுபான கடைக்கு செல்வம் நண்பர்களுடன் மது குடிப்பதற்காக சென்றுள்ளார். அந்த மதுபான கடை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் செல்வத்துக்கும், மது குடிக்க வந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்படும் ரயில்கள்….. சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளின் அறிவிப்பு….!!!

சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை ரயில்வே சாம்பல்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட தியோபஹால்-பர்கார் இடையே இருவழிப் பாதைகளில் பொறியியல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூர், ஈரோடு, போத்தனூர், சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டாட்டா நகரில் இருந்து புறப்படும் டாட்டா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்(18189) நாளை மற்றும் வருகிற 29-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகள் வாலிபருடன் சென்றாரா….?? கணவருக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்த மனைவி…. பரபரப்பு சம்பவம்….!!

கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை மல்லி செட்டி தெருவில் லாரி ஓட்டுநரான செந்தில்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் சிறுமி அந்த இரண்டு நாட்களுக்கு முன்பு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்….. படுகாயமடைந்த 3 பேர்….. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!

மோட்டார் சைக்கிள்- லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிவேகமாக பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. மேலும் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளான லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம்…… அதிகாரியின் அதிரடி உத்தரவு…..!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ரேணுகா தேவி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் ஒரு வாரத்திற்குள் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலர் நாசருதீனிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்….. இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது….. கோவில் நிர்வாகத்தினரின் அறிவிப்பு….!!!

இன்று முதல் மின் இழுவை ரயில் இயக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு கிரிவீதியில் அமைந்துள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து 3 மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக 3-ஆம் எண் மின் இழுவை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனை வாங்கி சென்ற தந்தை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் கீர்த்தனா(17) நம்பியூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கீர்த்தனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய் நாணயங்களை கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய மாணவர்….. நிறைவேறிய ஆசை….. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கடந்த 5 ஆண்டுகளாக பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்கிய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள காடையாம்பட்டி பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாயப்பட்டறையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பை முடித்துவிட்டு விளையாட்டு இயக்குனருக்கான மேல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமாருக்கு தனது உழைப்பினால் சேகரித்த […]

Categories

Tech |