Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முக்கிய பகுதிகளில் அதிரடி சோதனை….. இதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை….. எச்சரித்த அதிகாரிகள்….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் மற்றும் குறும்பலாபேரி ஆகிய முக்கிய பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அருகில் இருக்கும் கடைகளில் கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆலோசனைப்படி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை” நகராட்சி ஆணையாளரின் எச்சரிக்கை….!!!

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சரவணன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சிலர் தடையை மீறி பேனர்கள் வைத்த வண்ணம் இருக்கின்றனர். பொது இடங்களில் பேனர்களை தயார் செய்து பொருத்தும் நிறுவனத்தினரும் பேனர்களை வைத்துவருகின்றனர். இனி வரும் காலங்களில் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேனர்கள் தயாரிக்கும் மற்றும் பொருத்தும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இனியும் தொடரும்”…. மின்னல் ரவுடி வேட்டை…. 32 பேர் அதிரடி கைது….!!!!

தமிழகத்தில் கொள்ளை, திருட்டு, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்திலும் இந்த ஆபரேஷன் மாவட்ட சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வேட்டையில் பலர் பிடிபட்டுள்ளனர் மேலும் வேலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் மட்டும் இதுவரை 19 குற்றவாளிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தல்சானிக் போட்டி”…. பங்கு பெற்ற முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவர்….. பாராட்டு தெரிவித்த கல்லூரி முதல்வர்….!!!!

வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் துறையில் பயின்று வரும் மாணவர் தேசிய மாணவர் படையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் தேசிய அளவில் 17 என்.சி.சி இயக்குனரகங்களுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற தல்சாணிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் அடங்கிய இயக்குனரகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு மாணவரின் பங்கு அதிகம் உள்ளதால் அவரை கல்லூரி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களை பார்க்க சென்ற இன்ஜினியர்….. விடுமுறையில் வந்த போது விபத்தில் சிக்கி பலி…..பெரும் சோகம்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருசிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசைராஜா(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இசைராஜா தனது நண்பரான முருகேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருக்கும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மேலப்பாவூர் அடுத்துள்ள கால்வாய் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து கேட்ட சத்தம்…. சிறுத்தையை மீட்க போராடிய வனத்துறையினர்….!!!

கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். கேரள மாநிலத்தில் உள்ள தலப்புழா பகுதியில் ஜோகி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தவறி விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுக்குள் இருந்து சிறுத்தையின் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை தொடர்ந்து முதுமலையிலிருந்து ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தீபாவளி பரிசு பொருட்களை நம்பி ஏமாற வேண்டாம்” போலீசாரின் அறிவுரை…..!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, தீபாவளி நேரத்தில் பரிசு பொருட்கள் குறித்த விளம்பரங்களை பார்த்தால் பொதுமக்கள் நன்றாக ஆராய்ந்து விசாரிக்க வேண்டும். இதனை அடுத்து குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த முதியவர்….. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

விபத்தில் முதியவர் இருந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓராண்டு ஜெயல் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழாத்தூரில் முத்துப்பிள்ளை(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆலங்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து முதியவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டில் நகையை திருடிய பெண்…. செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தபோது சிக்கிய சம்பவம்….. போலீஸ் அதிரடி….!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சிவந்திநகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பங்கஜவல்லி(69) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவரது வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து தென்காசி காவல் நிலையத்தில் பங்கஜவல்லி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்த பங்கஜவல்லி தனது வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் திருடு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓடும் ரயிலில்…. பெண்களுக்கு தொந்தரவுகளை கொடுத்த…. குடிபோதை ஆசாமியை புரட்டி எடுத்த பயணிகள்….!!!!

ஓடும் ரயிலில் குடிபோதையில் ரகளை செய்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகரிலிருந்து மதுரைக்கு நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சென்றுள்ளது. இந்த ரயில் 11.30 மணி அளவில் விழுப்புரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் பாலியல் தொந்தரவுகளையும் கொடுத்துள்ளார். இதனை பார்த்த சகப்பயணிகள் போதையில் ரகளை செய்தவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலின் பூட்டை உடைத்து…. தங்க நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு…. போலீஸ் வலைவீச்சு….!!!!

அங்காளம்மன் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்தபின் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் பூட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது எப்படி நடந்தது….? மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த இருசக்கர வாகனம்…. போலீஸ் விசாரணை….!!!!

இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் மேம்பாலத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஆணைக்குழாய் பகுதியில் பிரபாகரன், சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் பிரபாகரனும் சிவகுமாரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அருகில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது” கரும்புகளை ருசிக்கும் காட்டு யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!!

சோதனை சாவடி அருகே காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வரும் யானைகள் ஆசனூர் சாலை வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து நிற்கிறது. இந்நிலையில் லாரி ஓட்டுனர்கள் சில கரும்புகளை காரப்பள்ளம் சோதனை சாவடியில் வீசி செல்கின்றனர். இதனால் சில காட்டு யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே முகாமிட்டு கரும்புகளை தின்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டை கடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!

பசுமாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லையன் புரம் பகுதியில் விவசாயியான நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மெய்ச்சலுக்கு விட்டு சென்ற மாடுகளை நாகலிங்கமாவின் மகன் மகேஷ் என்பவர் பார்க்க சென்றுள்ளார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து வனப்பகுதிக்கு இழுத்து சென்றது. பின்னர் காட்டுப்பகுதியில் கடித்துக் கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி கிராம […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீபாவளி செலவுக்கு பணம் இல்லை….. திட்டம் தீட்டிய 8 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி….!!!

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள முனியப்பன் கோவில் அருகே வீச்சரிவாளுடன் நின்று கொண்டிருந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆண்டிப்பட்டி சாலை மரத்து வட்டத்தில் வசிக்கும் விஜயகுமார், சூர்யா, அசோக், சத்தியமூர்த்தி, சீனிவாசன், தினேஷ்குமார், பிரகாஷ், மற்றும் மெய்யழகன் என்பது தெரியவந்தது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட பெற்றோர்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ நெடும்பூர் பிள்ளை தெருவில் மணிகண்டன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆனந்தி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்தார். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற மினி லாரி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!!

ஆலையிலிருந்து இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் 3 1/2 டன் இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த இரும்பு பொருட்களை அய்யம்பேட்டையில் இருக்கும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து திருடி வந்துள்ளனர். அவர்கள் ஆண்டார்முள்ளிபள்ளம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“3 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் மரணம்” தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!

கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூக்குழி கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(28) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வினோதினிக்கும், பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய பவிஷி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது வினோதினி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வேறொரு பெண்ணுடன் பாலாஜிற்கு பழக்கம் ஏற்பட்டதால் வினோதினியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மூதாட்டி….. மர்மமான முறையில் இறந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!!

மர்மமான முறையில் மூதாட்டி இறந்த கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகமரை பரிசல் துறை காவிரி கரையோர பகுதியில் மூதாட்டியின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாதத்தையொட்டி…. ஆஞ்சநேயர் கோயில்களில்…. சிறப்பு வழிபாடு….!!!!

ஆஞ்சநேயர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியே வழிபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. இந்த சிறப்பு வழிபாட்டில் சீதா, ராமன், லட்சுமணன், அனுமன், விக்னேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன காரணம்….? கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவி…. பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!

கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கொடுக்கன்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கலைச்செல்வன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கொடுக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் அப்பகுதியைச் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கவுந்தப்பாடி ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் நீள்நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒன்பதாம் ஆண்டு தேர் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முளைப்பாலிகை இடுதல், காப்பணிதல், 1008 வேள்வி வழிபாடு கோவிலில் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடப வாகனத்தில் சோமாசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். இதனை அடுத்து திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சௌந்தரராஜ பெருமாள் தெப்பத்தேர் உற்சவம்” மலர் தூவி வழிபட்ட பக்தர்கள்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் சௌந்தரராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு தெப்பத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. முன்னதாக பெருமாளுக்கு சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தாமரைப் பல்லக்கில் பெரிய ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது ஏராளமான பக்தர்கள் ஏரியின் இருபுறமும் நின்று மலர் தூவி சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு…. “பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை”…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாண்டுரங்கன் அலங்காரத்தில் ஆனந்த வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதே போல் அரசமங்கலம் வரதராஜ பெருமாள், கோலியனூர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்”…. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு….!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கும், தனி சன்னதியில் இருக்கும் வீர ஆஞ்சநேயருக்கும் பன்னீர், தயிர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. அரைகுறை ஆடையுடன் சாலையோரம் நின்ற இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது சாலையோரம் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை உறவினர்கள் மீட்டு விசாரித்தனர். அப்போது ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் டெய்லரிங் ஆர்டர்”….. ரூ.10 கோடி மோசடி செய்த தம்பதி…..போலீஸ் அதிரடி….!!!

10 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 1 1/2 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் திவாகர்- வைஷ்ணவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடை தைக்கும் நிறுவனர் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம்  கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் துணிகளை கொடுத்து தம்பதியினர் தைத்து வாங்கியுள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் திவாகர் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருகிறேன்” ரூ.16 லட்சம் அபேஸ் செய்த தம்பதி…. தந்தையின் பரபரப்பு புகார்….!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரங்கனூர் குறிச்சி கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாதையனுக்கு ஆத்தூரை சேர்ந்த சசிகுமார்-சாந்தலட்சுமி தம்பதியினருடன் பழக்கம் ஏற்பட்டது. சசிகுமார் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் நான் ஏற்கனவே 40 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பிரபல இசையமைப்பாளரின் இசை நிகழ்ச்சி” கல்லூரியில் சுற்றுசுவர் இடிந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கல்லூரியில் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்காததால் ஏராளமானார் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாலிபர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போதையில் பள்ளி வாகனத்தை ஓட்டிய நபர்….. கூச்சலிட்ட மாணவர்கள்…. பொதுமக்களின் செயல்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை நேற்று பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது வேன் தாறுமாறாக சென்றது. அப்போது பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டதால் பொதுமக்கள் வேலை தடுத்து நிறுத்தி விசாரித்த போது ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கையால்…. பரபரப்பில் விக்கிரவாண்டி….!!!!

தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி பகுதிக்கு அருகே சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கசாவடிக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் இணைந்து சுங்கச்சாவடி அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த போலீஸ்காரர்கள்…. அதிரடி நடவடிக்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இரண்டு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மதுபான கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை தடுக்க மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த தாமஸ்முருகன், போலீஸ்காரர் அருண் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து அவ்வழியாக வரும் வாகனங்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்…. மருந்து கடைகளில் திடீர் சோதனை…. போலீசாரின் அறிவுரை….!!!

மருந்து கடைகளில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களும், வாலிபர்களும் போதை, கஞ்சா, புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின் படி போலீசார் காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய முக்கிய பகுதிகளில் இருக்கும் மருந்து கடைகளில் சோதனை செய்தனர். அப்போது போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் ஏதேனும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தாலி தோஷம் இருப்பதாக கூறிய பெண்” நூதன முறையில் 30 பவுன் தங்க நகை அபேஸ்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்குன்று பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கம் வீட்டிற்கு சென்ற ஒரு பெண் தாலி தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் வீட்டில் வைத்து பரிகார பூஜைகள் செய்துள்ளார். அப்போது அந்த பெண் கூறியதை கேட்டு தங்கம் 30 பவுன் நகையை பூஜையில் வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் தங்க நகைகளை துணியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

5 லட்ச ரூபாயை இழந்த அதிகாரி….. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

தனியார் மில் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொளப்பலூரில் இருக்கும் தனியார் மில்லில் கிருஷ்ணமூர்த்தி உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில்  5 லட்ச ரூபாயை இழந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் புலம்பியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…..வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!#

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு சுபாஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண்….. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை….!!!

வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருவீடு கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(28) என்ற மகள் இருக்கிறார். இவர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரியங்காவுக்கும் பெரியகுளம் தேவதானப்பட்டியில் வசிக்கும் ஜோதிபாஸ் எல்லோருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ரித்வான் என்ற ஐந்து வயதில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய தொழிலாளி….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்துக் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தன்னுடன் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவரின் 16 வயது மகளிடம் மகேந்திரன் பேச்சு கொடுத்து பழகியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருமணமானதையும் மறைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மகேந்திரன் சிறுமியை கோயம்புத்தூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…… தலை முடியை தானமாக வழங்கிய கல்லூரி மாணவி….. குவியும் பாராட்டுக்கள்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் மணிகண்டன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் கூடலூர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அனிதா மகாத்மா காந்தி பொது சேவை மைய உறுப்பினராக இருக்கிறார். இவர் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார். எனவே அனிதா தனது தலை முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அதனை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் மகாத்மா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்” தொல்லியல் ஆய்வாளரின் தகவல்….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சில்லாம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாமணன் உருவம் பொறித்த எல்லைக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, சுமார் 2 அடி உயரமுடைய கல்லில் ஒன்றரை அடிக்கு வாமனன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எட்டுபட்டறை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை குறிக்கும் வகையில் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த எல்லைக்கல் நடப்பட்டிருக்கலாம். நாயக்கர் காலத்தில் இது எல்லைக்கல்லாக அமைக்கப்பட்டிருக்கலாம். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வயிற்றில் 6 மாத சிசுவுடன் இறந்த சிறுமி” கணவர், மாமனார் மீது வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை….!!

கர்ப்பமாக இருந்த சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கண்டகபைல் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான முத்து(22) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முத்துவும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஓய்வு பெற்ற முதியவருக்கு வெளிநாட்டில் வேலை” நூதன முறையில் 15 3/4 லட்ச ரூபாய் மோசடி….. போலீஸ் விசாரணை….!!!

முதியவரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் வண்ணார்பாளையத்தில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை தேடி வீரபாண்டியன் முழு விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஒருவர் செல்போன் மூலம் வீரபாண்டியனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தனது பெயர் லாரன்ஸ் பிராங்க் எனவும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் கேட்ட மர்ம நபர்கள்….. மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு கொள்ளை….. பரபரப்பு சம்பவம்….!!!

மூதாட்டியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையை திருடி சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் விவசாய சுப்பிரமணி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பாத்தாள்(59) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று மதியம் 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் என கேட்டனர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தனியாக செல்ல வேண்டாம்” குட்டிகளுடன் நிற்கும் காட்டெருமைகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!!

குட்டிகளுடன் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருக்கும் புற்களை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வருவதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பேருந்துகளில் இருந்து இறங்கி வீடுகளுக்கு நடந்த செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், தொழிலாளர்கள் இரவு நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆட்டோக்களில் மினி நூலக திட்டம்” தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர்….!!!

கோயம்புத்தூர் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆட்டோக்களில் மினி நூலகம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, ஓய்வு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் புத்தகம் வாசிப்பதற்கு வசதியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களும் புத்தகங்களை எடுத்து வாசிப்பதன் மூலம் புத்தக வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கிறது. கோவை மாநகரில் ஓடும் அனைத்து ஆட்டோக்களிலும் மினி நூலகம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பெண்கள் பாதுகாப்பு, தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த வாலிபர்கள்….. விபத்தில் சிக்கி படுகாயம்….. போலீஸ் விசாரணை….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பா.கொத்தனூர் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபு(32) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபு அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி(22), ராமச்சந்திரன்(26) ஆகியோர் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று காலை விருதாச்சலம் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கால்கள் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி….. வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வசந்தாவுக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றது. அதில் நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கால்நடை துறை அதிகாரிகள் ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘சீட்’ வாங்கி தருவதாக ஏமாற்றி….. 63 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மோசடி….. போலீஸ் அதிரடி….!!

பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளுத்துவாஞ்சேரி அண்ணா நகரில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பினார். எனவே தனது மனைவியின் தம்பி ராமநாதனிடம் தனது விருப்பம் குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் டாக்டர் சீட் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் நேரடியாகவும் வங்கி கணக்கிலும் 63 லட்சத்து 44 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 50-க்கும் மேற்பட்ட முறை…. கடையை உடைத்து நாசப்படுத்திய யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்தது. அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்த பிறகு காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்து ரேஷன் அரிசிகளை தூக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்…. ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான கால்….. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி- கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ரயிலில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகளிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது இரண்டு கால்களும் ரயில் […]

Categories

Tech |