Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலாளி படுகொலை…. உடலை நீர்வீழ்ச்சியில் வீசிய நண்பர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8- ஆம் தேதி நண்பர்களுடன் ரத்தினகுமார் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரத்தினகுமாரின் அண்ணன் ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை” வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் வாலிபர்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த பெற்றோர்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரகுபதி(25) என்ற மகன் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏஜென்ட் மூலம் குவைத் நாட்டிற்கு ரகுபதி ஓட்டுநர் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டிரைவர் வேலை கொடுக்காமல் வீட்டு வேலை செய்ய வலியுறுத்தி சிலர் ரகுபதியை அடித்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தன்னை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என செல்போன் மூலம் ரகுபதி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட பள்ளி வாகனங்கள்…. 17 மாணவர்கள் உள்பட 19 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உட்பட 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள் மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு கோ.மாவிடந்தல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய 2 வாகனங்களும் மோதியதில் ஒரு வாகனம் சாலையோரம் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர், 8 மாணவிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுடுகாடு வழியாக நடந்து சென்ற தொழிலாளி…. உறவினரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தொழிலாளியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான மஞ்சமுத்து(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான ராமலிங்கம்(37) என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் சுடுகாடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முத்துவை ராமலிங்கம் ஆபாசமாக திட்டி கட்டையால் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!!!

10- ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த வரம் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்தார். அப்போது பண்டாரசெட்டிபட்டி பகுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஹைகோர்ட்டில் வேலை வாங்கி தருகிறேன்” 9 1/2 லட்ச ரூபாய் மோசடி…. தம்பதியை கைது செய்த போலீஸ்….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தா. குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நிர்மலாவுக்கு அறிமுகமான ஆறுமுகம் என்பவர் ஹைகோர்ட்டில் உங்களது மகனுக்கு இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அன்பு 3 தவணைகளாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஜாக்கிகள் மூலம் 3 அடி உயர்த்தப்பட்ட வீடு” நவீன தொழில்நுட்பத்தை வியப்புடன் பார்த்து சொல்லும் பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி தெற்கு தெருவில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 850 சதுர அடி பரப்பளவுடைய வீடு 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் தரை உயர்ந்து, வீடு பள்ளமாகியதால் கழிவுநீரும், மழை நீரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அஸ்திவாரத்தை உயர்த்த முடிவு செய்த சச்சிதானந்தம் “ஹவுஸ் லிப்டிங் வித் ஜாக்கி” என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மகளின் சாவிற்கு நீதான் காரணம்” பெண்ணை அடித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!!

கடப்பாரையால் அடித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காராம்பட்டி பகுதியில் சின்ன கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா(56) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே மின்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் திடீரென உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் லட்சுமி செய்வினை வைத்ததால் தான் தனது மகள் இறந்ததாக கூறி கருப்பையா அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய கார்….. பள்ளிக்கு சென்ற ஆசிரியர் படுகாயம்…. கோர விபத்து….!!!

பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஜான் பெஸ்டர்ட் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் இவர் சிவகங்கையில் இருந்து காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

“தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி” 28 கி.மீ தூரம் பாதயாத்திரையாக வந்த வாலிபர்கள்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நூர்சாகிபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் விரதம் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை மீது இருக்கும் காட்டழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலின் அடிவாரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்த தொட்டியில் தீர்த்தம் எடுத்து 28 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்தனர். இதனை அடுத்து தீர்த்த நீரை […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“ஐப்பசி திருக்கல்யாண திருவிழா” பிரபல கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!

கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடங்கிய திருவிழா வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் 9-ஆம் நாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்….. அதிர்ச்சியடைந்த போலீசார்…. தீவிர விசாரணை…!!!

 அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு காவல் நிலைய குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்று நிலத்தை அளக்க முயன்றனர். அப்போது அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இணையதளத்தை” பயன்படுத்தும் மாணவிகளே…. இதை மட்டும் செய்யாதீங்க…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை….!!!!

சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மற்றும் அழகப்பா அரசு கலை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பில் கல்லூரி முதல்வர் துரை தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவ மாணவிகள் காரைக்குடி ஆரிய பவன் சந்திப்பிலிருந்து கல்லூரி சாலை வழியாக அழகப்பா அரசு கலை கல்லூரிக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போது இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படியும், முழக்கங்களை எழுப்பியும் மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன்…. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலை கண்டெடுப்பு…. வெளியான தகவல்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் வசிக்கும் பூசாரி சிங்கராஜா என்பவர் பழங்கால சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்த தகவலின் படி பாண்டியநாடு பண்பாடு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, மகாபாரதம், அக்னி, மச்ச புராணங்களில் அடிப்படையில் தேவர்களின் குரு பிரகஸ்பதி ஆவார். இவர் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருகிற 25, 26-ஆம் தேதிகளில்….. நாகர்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்….. வெளியான தகவல்….!!!!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது, நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 25-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்- பெங்களூர் கன்டோன்மென்ட் சிறப்பு ரயில்(06051) நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கரூர், நாமக்கல் வழியாக காலை 4.45 மணிக்கு சேலம் சென்றடையும். இதனை அடுத்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 9.20 மணிக்கு வந்தடையும். இதேபோல் பெங்களூரு கன்டோன்மென்ட்- நாகர்கோவில் சிறப்பு ரயில்(06052) […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரால் எடுத்த விபரீத முடிவு…. தாயின் பரபரப்பு புகார்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாண்டவனுர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ்குமார் லிங்கம்மாள்(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சந்தோஷ் குமார் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லிங்கம்மாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் தொழில் நிறுவனங்களில் திடீர் ஆய்வு…. 3 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை….!!!

தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்த 3 சிறுமிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், கோழிப்பண்ணைகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 சிறுமிகள் சில நிறுவனங்களில் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் சிறுமிகளை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக 3 நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த 3 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“காப்பாளராக சான்றிதழ் வழங்க வேண்டும்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக போராடும் மூதாட்டி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமன்கோட்டையில் கண்ணம்மாள்(68) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேத்தி மற்றும் பேரனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் தர்மலிங்கம் டெங்கு காய்ச்சல் காரணமாக இருந்துவிட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மருமகள் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு எங்கோ சென்று விட்டார். இதனால் கார்த்திகா(8), லாவண்யா(13), […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“மாவட்ட அளவிலான தடகள போட்டி” பரமக்குடி மாணவி சாதனை….. குவியும் பாராட்டுகள்…!!!

முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பரமக்குடியில் வசிக்கும் ஷர்மிளா என்ற மாணவி குண்டு எரியும் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அந்த மாணவிக்கு மாநில தடகள சங்கத்தின் இணை செயலாளர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டியுள்ளார். வருகிற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகள்களை மாமியார் வீட்டில் விட்டு வந்த தந்தை…. தம்பதி தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!!

கடன் தொல்லையால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் சிவகுமார்(50)- கிருஷ்ணவேணி(45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சிவக்குமார் கிருஷ்ணகிரி சாலையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட சிவக்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம்…. ஆபாசமாக பேசிய போதை வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது இளம்பெண்ணை குடிபோதையில் இருந்த வாலிபர் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் வாலிபர் ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி…. சப்-இன்ஸ்பெக்டர்- மனைவி மீது பரபரப்பு புகார்….. போலீஸ் விசாரணை….!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை அம்மன் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணம் என்ற மனைவி உள்ளார். இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, மதுரை பரவை சங்கன்கோட்டை தெருவில் வசிக்கும் மாநகர குற்றப்புலனாய்வு போலீசில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் மோகன் குமார் அவரது மனைவி கஸ்தூரி ஆகிய 2 பேரும் கடந்த 4 வருடங்களாக தீபாவளி பொங்கல் சீட்டு நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த வேன்….. கண்ணாடி வழியாக தப்பித்த ஓட்டுநர்….. போலீஸ் விசாரணை….!!

வேன் மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் இயங்கி வரும் தனியார் கம்பெனிக்கு பணியாளர்களை ஏற்றி வருவதற்காக நேற்று முன்தினம் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் முக்கண்ணாமலைப் பட்டி சக்கரான்குளக்கரை அருகே சென்றபோது திடீரென மழை பெய்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் மின்கம்பம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில்….. கட்டணம் எவ்வளவு….? ரயில்வே கோட்ட மேலாளரின் உத்தரவு….!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கட்டண அறையில் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்தனர். இந்த ரயிலை சிறப்பு கட்டண ரயிலாக இயக்குவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோட்ட மேலாளர் உத்தரவின்படி, நேற்று முதல் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ரயில் இயக்கப்பட்டது. அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு 70 ரூபாய், ராமநாதபுரத்தில் இருந்து 55 ரூபாய், பரமக்குடியில் இருந்து 45 ரூபாய், மானாமதுரையில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டீசல் இல்லாமல் நின்ற பேருந்து…. கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி 10 பேர் காயம்…. கோர விபத்து….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவா(38) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சென்றபோது டீசல் இல்லாமல் பேருந்து நின்றது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற மற்றொரு ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்த பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் லலிதாம்பிகை(30), ரேவதி(23), ராஜாமணி(62) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

புற்களை அப்புறப்படுத்திய வாலிபர்….. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டப்பனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்த கோவிந்தராஜ் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் 60 அடி ஆழமுடைய விவசாய கிணற்றை சுற்றி முளைத்திருந்த புல்லை கோவிந்தராஜ் அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கோவிந்தராஜ் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனகுறைவு தான் காரணமா….?? சிகிச்சை பலனின்றி இறந்த 12-ஆம் வகுப்பு மாணவன்…. தாயின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

மகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் தாய் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் மின்னல் கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிகிருஷ்ணன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹரிகிருஷ்ணனை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனது மகனின் இறப்பிற்கு டாக்டர்களின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி சாவில் மர்மம்…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜிக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாலாஜி தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக வினோதினியின் தந்தை வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பாத்திரத்திற்குள் தலை சிக்கியதால்…. மூச்சு திணறல் ஏற்பட்டு அழுத குழந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை விசாலாட்சி நகரில் ஜோனத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை சில்வர் பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதனை எடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு அழுத குழந்தையை பார்த்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாய் அடித்ததால் காயமடைந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

தாய் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை செங்குளம் காலனியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பானுப்பிரியா கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 6-ஆம் தேதி தனது மகளுக்கு பானுப்பிரியா சாப்பாடு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதி…. அணையில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!!

தடுப்பணையில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இலியாஸ் அஹமத்(45), என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இலியாஸ் 12-ஆம் வகுப்பு மாணவரான உஜேர் பாஷா(17), உவேஸ் அஹமது, ராகில் பையஸ் ஆகிய 3 பேருடன் தடை செய்யப்பட்ட பகுதியை கடந்து பாலாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அணையில் இறங்கிய போது கால் வலிக்கு உஜேர் பாஷா அணையில் தவறி விழுந்து மூழ்கியதை […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு….. குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்திப்பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்ற பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு […]

Categories
ஆன்மிகம் தென்காசி மாவட்ட செய்திகள் விழாக்கள்

“1008 திருவிளக்கு பூஜை” மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா…. திரளான பெண்கள் தரிசனம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாரத ரத்னா காமராஜர் கலையரங்கத்தில் வைத்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற 1008 திருவிழாக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் கோவில்கள் மதுரை மாவட்ட செய்திகள்

வரம் தரும் “ஆதி ஜோதி முருகர் கோவில்” புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜைகள்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கரடு மழை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு விபூதி, இளநீர், குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Categories
ஆன்மிகம் கோவில்கள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்” மலை ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்….. புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை…..!!!

விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று காலை கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததால் அனுமதி வழங்குவதில் தாமதமானது. இதனை அடுத்து மழை நின்றதும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதித்தனர். இந்நிலையில் பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு இளநீர், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் அமைக்க…. ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கீடு…. நன்றி தெரிவித்த மீனவர்கள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ கிராமங்கள் அதிகம் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பழையார், பூம்புகார் ஆகிய இடங்களில் மீன் பிடி துறைமுகங்கள் அமைந்துள்ளது. தற்போது தரங்கம்பாடியில் புதிதாக மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குப்பம் கடற்கரையில் பருவநிலை மாற்றத்தின் காரணத்தினால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இதனால் கிராமங்களுக்குள் தண்ணீர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி…. திரளான மாணவ மாணவிகள் பங்கேற்பு….!!!!

சிலம்பம் தனித்திறமை போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரதம் மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு முதல் ஒன்பது வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டி வயது அடிப்படையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் தற்கொலை…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!!!

கர்ப்பிணிப் பெண் தற்கொலைக்கு காரணமான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் திருமலை அகரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்ட த்தில் பூக்குலி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகளான வினோதினியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதனை அடுத்து வினோதினி இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார். இதனை அடுத்து மூன்று மாத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலத்தில்…. சிலம்பம் சுற்றிய சிறுவர் சிறுமியர்…. கண்டுகளித்த பொதுமக்கள்….!!!!

உலக நடைப்பயிற்சி தினத்தையொட்டி ஓசூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட சிலம்பர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை மாவட்ட சிலம்ப சங்கத்தின் தலைவர் நாகராஜ் அவர்கள் ஓசூர் ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்துள்ளனர். இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள், சிறுமிகள் சிலம்பத்தை சுற்றியபடி மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஓசூர் ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அசோகா சர்க்கிள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி மலை முருகன் கோவில்”…. பழுதடைந்த சரக்கு ரோப் கார்…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சார்பில் மலையடிவாரத்தில் பஞ்சாமிர்தம் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் அங்குள்ள சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்த பஞ்சாமிர்தத்தை மலை கோவிலுக்கு கொண்டு வருவதற்கு தெற்கு கிரிவீதியில் அமைந்துள்ள சரக்குரோப் கார் சேவை இயங்கி வருகின்றது. இந்த நிலையில் இந்த ரோப் கார் கடந்து சில நாட்களுக்கு முன்பு பழுது அடைந்துள்ளது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் ரோப் காரினுடைய கம்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்னாள் கவுன்சிலருக்கு சொந்தமான கட்டிடத்தில்…. பயங்கர தீ விபத்து…. விசாரணையில் போலீசார்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இக்பாலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் கோழி இறைச்சி கடையும் மேல் தளத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் குடோனும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வார விடுமுறை நாட்கள்…. கலை கட்டிய கொடைக்கானல்…. குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதி அமைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கலை கட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது வழக்கமான ஒன்று. அதேபோல் நேற்று முன்தினமும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படையெடுத்துள்ளனர். இந்த காரணத்தால் குணா குகை, பில்லர் ராக், பிரைண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அக்காவுக்கு பிறந்த குழந்தை….. பார்க்க சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமையில் சந்தித்த காதலர்கள்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்ஊத்துக்குளி கிராமத்தில் பெயிண்டரான பார்த்திபன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மீண்டும் வந்த பாகுபலி யானை” இரவு நேரத்தில் சாலையில் உலா…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிமலை அடிவார பகுதியில் சமயபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் இரவு நேரத்தில் நுழைகிறது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி வழியாக கல்லார் வனப்பகுதிக்கு சென்று, தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசப்படுத்தியது. மேலும் இரவு நேரத்தில் பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் அங்கும் இங்கும் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோதிரத்தை விழுங்கிய நபர்…. விசாரணையின் போது நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!!

விசாரணையின் போது வாலிபர் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் விஜய்(26) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் விசாரணை நடைபெற்ற போது அந்த வாலிபர் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை விழுங்கியதால் காவல் நிலையத்தில் பரபரப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“5ஜி சிம் கார்டு மாற்று தருகிறோம்” நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் கும்பல்…. போலீசார் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த 1-ஆம் தேதி பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை முதற்கட்டமாக டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 4ஜி சிம் கார்டுகளை 5ஜி சிம் கார்டுகளாக மாற்றுத் தருவதாக கூறி மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, பணத்தை மோசடி செய்யும் மர்ம கும்பல் 4ஜி சிம் கார்டை 5ஜி  சிம் கார்டுகளாக மாற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த வாலிபர்…. ஏமாற்றப்பட்ட கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் வசிக்கும் 22 வயதுடைய வாலிபர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தும் ஒரு செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதன் மூலம் அவருக்கு வாலிபரின் நட்பு கிடைத்தது. இருவரும் செயலி மூலம் பழகி வந்தனர். இந்நிலையில் அந்த வாலிபர் சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட பானிபூரி வியாபாரி…. வாலிபரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

பானிபூரி வியாபாரியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங்(39) என்பவர் வேலை தேடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். இவர் ரோட்டரி நகர் ஏழாவது பிரதான சாலை ஓரமாக தள்ளு வண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆ ம் தேதி ஒரு வாலிபர் பானிபூரி சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனை தட்டி கேட்ட அமர்சிங்கை அந்த வாலிபர் கற்களை கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்…. கை குழந்தையுடன் பலியான தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாயும், கைக்குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் பூங்குழலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சாலைக்கு மறுபுறம் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பூங்குழலி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளம் பெண்ணும், அவரது கைக்குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories

Tech |