தண்ணீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சாத்தான் குப்பம் பஜனை கோவில் தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகேஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார்(19), விஜய்(19) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். மூன்று பேரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர்கள் மூன்று பேரும் திருப்போரூரில் இருக்கும் விஜயின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குளத்தில் இறங்கி மேல் படிக்கட்டுகளில் அமர்ந்த படி […]
