விவசாயிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளின் தர பராமரிப்பு தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் சுகாதார முறைகளும், தரமானதாகவும் நுகர்வோருக்கு கிடைப்பதற்காக அதற்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமிற்கு வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றுள்ளார். பிறகு உழவர் சந்தை வேளாண்மை நிர்வாக அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்துள்ளார். […]
