பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டிக்கொட்டை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்கு சுப்பாத்தாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஹரிணி ஸ்ரீ, கோதைநாயகி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் கோதைநாயகி பதினொன்றாம் வகுப்பும், இரண்டாவது மகள் ஹரிணி ஸ்ரீ ஏழாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிணி ஸ்ரீ ஆடு மேய்க்கவும், அவரது […]
