ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்னையில் விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர் கனரா வங்கி எதிரில் உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் சாதாரண உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞரிடம் விசாரித்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. அப்போது அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. அவரிடமிருந்த […]
