கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் முருகா ரெடி தெருவில் தூய தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சரக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவரது கணவர் பிரகாஷ் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். […]
