களப்பணியாளர்கள் பணிக்கு ஆயிரம் பேரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் களப்பணியாளர்கள் ஆயிரம் பேர் நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நேர்முகத் தேர்வு அஸ்தம்பட்டி மண்டலத்தில் இருப்பவர்களுக்கு கோட்டை பல்நோக்கு அரங்கிலும், சூரமங்கலம் மண்டலத்தில் உள்ளவர்களுக்கு திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என் கல்யாண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்டவர்களுக்கு திருச்சி ரோட்டில் உள்ள […]
