இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தூர் ஊராட்சியின் தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் எரியோடு- வேடசந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் திடீரென சாலையை கடந்து சென்றுள்ளார். இதனால் அவர் மீது மோதாமல் சோமசுந்தரம் தனது இருசக்கர வாகனத்தை சற்று திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சோமசுந்தரம் இருசக்கர வாகனத்திலிருந்து […]
