சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை-திண்டுக்கல் மாவட்ட எல்லையான சமுத்திரப்பட்டி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 7 மூட்டைகளில் காருக்குள் கஞ்சா இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் வசிக்கும் அழகு மற்றும் குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]
