கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள தென்கரை பகுதியில் ஹரிஷ் ரகுமான்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஷேக் அப்துல்லா(23), முகமது தாரிக்(23) ஆகியோருடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் பெரியகுளத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பாலசுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- […]
