Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக பரவும் காய்ச்சல்…. வீடுகளுக்கே செல்லும் போலி மருத்துவர்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா…..??

தமிழ்நாடு முழுவதும் டெங்கு வைரஸ், மலேரியா, இன்சூரன்ஸ் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 100-க்கும் மேற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதில் தீவிர நோய் தொற்று இருக்கும் 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பிளியம்பட்டி, கோபால்பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வருகிற 4-ஆம் தேதி முதல்….. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென்மேற்கு ரயில்வே பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மைசூர்-தூத்துக்குடி, எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி ஆகிய மார்க்கம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயில்(06565) வருகிற 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் மதியம் 12:45 மணிக்கு எஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மற்றொரு மார்கத்தில் திருநெல்வேலி- எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில்(06566) 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் காலை 10:40 மணிக்கு திருநெல்வேலியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம்…… அதிகாரியின் அதிரடி உத்தரவு…..!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ரேணுகா தேவி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் ஒரு வாரத்திற்குள் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலர் நாசருதீனிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்….. இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது….. கோவில் நிர்வாகத்தினரின் அறிவிப்பு….!!!

இன்று முதல் மின் இழுவை ரயில் இயக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு கிரிவீதியில் அமைந்துள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து 3 மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக 3-ஆம் எண் மின் இழுவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு…. கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு பழனியில் இருக்கும் விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பழனி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த வாலிபர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியில் தொழிலதிபரான ஸ்ரீபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக ஸ்ரீபாலன் நாமக்கல்லுக்கு சென்று விட்டார். இதனால் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர் உள்ளே நுழைந்தார். இதனை அடுத்து சத்தம் கேட்டு பிரியா எழுந்து […]

Categories
ஈரோடு திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி 100 கி.மீ வேகத்தில் இயங்கும்…. பொள்ளாச்சி-பழனி ரயில் வழித்தடம்…. அதிகாரிகளின் உத்தரவு….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பாலக்காடு மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழியாக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல அறையில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி-பழனி இடையேயான வழித்தடத்தில் 70 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் வேகத்தை அதிகரிக்க அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அம்சங்கள், அதிர்வுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே அதிகாரிகள் ரயிலின் வேகத்தை அதிகரிக்க உத்தரவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, 70 கி.மீ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ஏ.வி பட்டி சாலையில் இருக்கும் ரயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….?? 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை….. போலீஸ் அதிரடி…!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால் அதிகாரிகள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் நபர்களை போலீசார் கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை…. பழனி மாணவருக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

கின்னஸ் சாதனை படைத்த பழனியை சேர்ந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1039 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவ- மாணவிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடி அசத்தியுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியை சேர்ந்த கார்த்திகேயா(12) என்ற மாணவரும் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். அவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக நடந்து சென்ற பெண்…. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னஅய்யம்பள்ளி குளம் பகுதியில் 24 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது பால சமுத்திரத்தை சேர்ந்த ஓட்டுநரான சரத்குமார், கூலி தொழிலாளர்களான மதன், கோட்டை முத்து ஆகியோர் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை…. மது ஊற்றி கொடுத்து சித்திரவதை செய்த பெண்…. திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து நிலையத்தில் வைத்து பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் மதுவை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பின் ஒருவர் ஒரு மாதமே ஆன கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.அந்த பெண் குழந்தைக்கு வாயில் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணும் மதுபானத்தை குடித்து குழந்தையை அடித்துள்ளார். இதனை பார்த்து வியாபாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவில் ரோப்கார்…. பொருத்தப்பட்ட புதிய பெட்டிகள்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

பழனி முருகன் கோவில் ரோப்காரில் பொருத்தப்பட்ட புதிய பெட்டிகளில் பக்தர்கள் ஆனந்தமாக பயணம் செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் வசதி இருக்கிறது. இதில் கிழக்கு கிரி வீதியில் இருக்கும் ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு தலா நான்கு பெட்டிகள் வீதம் எட்டு பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புதிய ரோப் பெட்டிகளை வாங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயல்வெளிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு….. எவ்வளவு செலவாகும்….??? விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி….!!!

டிரோன் மூலம் வயல்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டிரோன் மூலம் நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி தெளிப்பது என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது விளாம்பட்டி பகுதியில் இருக்கும் நெல் வயல்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்திகிராம வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உரசுவது போல வந்த டிராக்டர்…. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி தாக்கிய கண்டக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

நடுரோட்டில் அரசு பேருந்து கண்டக்டரும், டிராக்டர் ஓட்டுநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்றபோது அவ்வழியாக சென்ற டிராக்டர் பேருந்து மீது உரசுவது போல வந்தது. இதனை பார்த்த கண்டக்டர், டிராக்டர் ஓட்டுனரிடம் சாலையோரமாக மெதுவாக செல்லுங்கள் என கூறியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இங்கு தினமும் 25 டன்களுக்கும் மேல் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நள்ளிரவு முதல் காய்கறிகள் வரத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு வியாபாரிக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை பார்த்த கடைக்காரர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த செல்போன் கோபுரம்…. அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

செல்போன் கோபுரத்தில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அதன் அருகே மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அறை இருக்கிறது. நேற்று மாலை ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாறையில் ஏற முயன்ற மான்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் தகவல்….!!!

பாறையில் இருந்து தவறி விழுந்து மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று காலை கொடைக்கானல்-பழனி மலை பாதையில் பி. எல். செட் அருகே ஒரு மான் இரைத்தேடி வந்தது. இந்நிலையில் அங்குள்ள பாறையில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி மான் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மானை மீட்டு சிகிச்சை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாழைப்பழ துண்டை விழுங்கிய குழந்தை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பெரும் சோகம்….!!

வாழைப்பழ துண்டை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்றரை வயதுடைய சையது மௌலானா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாழைப்பழ துண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கினான். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனிக்கு வந்த புஷ்பா பட வில்லன்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்…. நிருபர்களுக்கு அளித்த பேட்டி…!!

நடிகர் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு புஷ்பா படத்தில் வில்லனாக நடித்த சுனில் சென்றுள்ளார். அவர் ரோப்கார் மூலம் மலை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். இதனை அடுத்து ரோப்கார் மூலம் சுனில் அடிவார பகுதிக்கு வந்துள்ளார். அவருடன் பக்தர்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து நம்ம பழனி என்ற செல்பி ஸ்பாட்டில் நின்று சுனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அடுத்து நிருபர்களிடம் சுனில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினர்…. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான வீரமணி என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கம்மாளப்பட்டியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தங்கமணியும், வீரமணியும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகே இருக்கும் குட்டையில் சிலர் நண்டு பிடிப்பதை தங்கமணியின் மகன் லத்தீஷ் வினியும்(9) வீரமணியின் மகன் சர்வனும்(6) […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோழியை துரத்தி கடித்த நாய்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் காமராஜர் நகரில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான விஷ்ணு(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்து(38) என்பவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் முத்துவின் வீட்டருகே இரை தேடி கொண்டிருந்த கோழியை அங்கு வந்த விஷ்ணுவின் நாய் கடித்ததாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. திடீரென பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவார பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அந்த காரை அய்யம்புள்ளி சாலையோரமாக நிறுத்திவிட்டு அனைவரும் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. பிறந்த நாளில் உடல் கருகி இறந்த மாணவர்…. பெரும் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன்(17) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று பிரவீனுக்கு பிறந்தநாள் என்பதால் தனது நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டார். அதன்படி பிரவீன் தனது நண்பர்களான ஆகாஷ்(17), நரசிம்மன்(17) ஆகியோருடன் ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கேக் வெட்டி பிறந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மிகவும் ஆபத்தான எறும்புகள்” விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கரந்தமலை அடிவார தோட்டங்களில் இருக்கும் செடி, கொடிகளில் விஷ எறும்புகள் இருக்கிறது. இதனால் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கரந்தமலை பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வகை எறும்புகள் மிகவும் அபத்தானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

ரயில் அடிபட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஆணின் சடலம் கடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் புதுப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற முதியவர்….. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வபோது சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கு நிற்கும் காட்டெருமைகள் மற்றும் யானைகளை புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது உயிர் சேதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டக்கானல் பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக…. சிறப்பாக நடைபெற்ற மீன் பிடி திருவிழா…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் பகுதியில் உள்ள பெரியகுளம் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது. இதனை அடுத்து கிராம மக்கள் பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை அந்த குளத்தில் வளர்க்க விட்டுள்ளனர். தற்போது மீன்கள் பெரிதான நிலையில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றுள்ளது. இதற்காக ஏராளமான கிராம மக்கள் குளத்திற்கு வந்து போட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கோபிநாத்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லேகா பாய்(25) என்ற மனைவியும், நிஷா(2) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் கோபிநாத் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் சிப்காட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சிப்காட்டில் இருந்து சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்….. கூண்டில் சிக்கிய குரங்குகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை செம்மண் மேடு பகுதியில் இருக்கும் ஏராளமான குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் துணிகளை எடுத்து செல்கிறது. நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் 2 கூண்டுகளை வைத்தனர். அந்த கூண்டுக்குள் இருந்த உணவுகளை பார்த்து ஓடிவந்த குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. நேற்று மாலை வரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் விழுந்த பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பூசாரிப்பட்டியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 6 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாடு தடுப்பு சுவர் இல்லாத 70 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை அடுத்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரியில் இறந்து கிடந்த ஓட்டுநர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

நெஞ்சுவலி ஏற்பட்டதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் லாரி ஓட்டுனரான பாண்டி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பாண்டி வேடசந்தூரில் இருந்து நோட்டு மற்றும் புத்தகங்களை ஏற்றி கொண்டு லாரியில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை கடைவீதி அருகே சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பாண்டி அப்படியே அமர்ந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொண்ணு(24) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திகேயன் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிவுநீர் கலந்ததால் செத்து மிதக்கும் மீன்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கழிவு நீர் கலந்ததால் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுள்ளெறும்பு நால்ரோடு காலனி அருகே கெங்கன்குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கெங்கன்குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆலையிலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே காட்டெருமை உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இதனை அடுத்து காட்டெருமை சாலையில் உலா வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 1 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள எண்டப்புளி புதுப்பட்டி பகுதியில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலேஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கபிலேஷ் உறவினர் ஒருவருடன் பெரியார் பிரதான நீர் பாசன கால்வாயில் குளித்து கொண்டிருந்தான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான பெலிக்ஸ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெலிக்ஸ் மோட்டார் சைக்கிளில் கோதமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெலிக்ஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வலி தாங்க முடியவில்லை” கர்ப்பிணி பெண் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆட்சிபுரத்தில் அழகுமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த சில வாரங்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கணக்குபிள்ளையூர் பகுதியில் விவசாயியான ராமன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்து 50 அடி ஆழ கிணற்றில் பசு மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்த ராமன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தறிகெட்டு ஓடி கடைகள் மீது மோதிய கார்….. ஓட்டுநருக்கு தர்மஅடி கொடுத்த வியாபாரிகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தாறுமாறாக ஓடிய கார் சாலையோர கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். நேற்று மாலை எரிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த 6 கடைகள் மீது பயங்கரமாக மோதியது. மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது தறிக்கெட்டு ஓடிய கார் ஓடியதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நளினி என்ற சுற்றுலா பயணியும், வேளாங்கண்ணி என்ற வியாபாரியும் படுகாயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிலைகளுக்கு அடியில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சிற்பக்கலை கூடத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ராஜாஜி சாலையில் தனியார் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. இங்கு சாலை ஓரத்தில் கற்கள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சிலைகளுக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சுமார் 3 அடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி தேவர்நகர் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரியதர்ஷினி, அங்கயர்கன்னி, ஜோதிமணி, ராஜகுரு, உமா மகேஸ்வரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கியாஸ் கசிவை கவனிக்கவில்லை…. உடல் கருகிய நிலையில் கிடந்த ஊழியர்கள்…. பெரும் சோகம்…!!

டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு ஊழியர் பலியான நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தருமத்துப்பட்டி கிராமத்தில் மதுரைவீரன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தண்டபாணி(53) என்பவரும் கன்னிவாடி புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டீக்கடையில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரைவீரனும், தண்டபாணியும் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அடுப்பை பற்ற வைத்தவுடன் 2 பேர் மீதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இவர்களது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த பெண்….கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை கத்தியால் குத்திய விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல்(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் வலியில் அலறி சத்தம் போட்ட முத்துவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவு பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை ஜிந்தா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்தது. அப்போது உராய்வு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக லாரியை சாலையோரமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன்சுமை…. ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் கிருஷ்ணமூர்த்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டல் நடத்தியதில் போதிய வருமானம் இல்லாமல் கிருஷ்ணமூர்த்தி சிரமப்பட்டுள்ளார். மேலும் கிருஷ்ணமூர்த்தி சிலரிடமிருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதங்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோபால்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் கோபாலகிருஷ்ணன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபாலகிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் மிதந்த குட்டி தவளை…. வலைதளத்தில் வைரல் வீடியோ…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!c

மது பாட்டிலுக்குள் தவளை மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(51) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாண்டி சித்தரேவு அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். அங்கு பாண்டி குவாட்டர் பாட்டிலை வாங்கி மது குடிப்பதற்காக அதனை குலுக்கியுள்ளார். அப்போது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் குட்டித் தவளை மிதப்பதை பார்த்து பாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

80 அடி ஆழமுடைய கிணறு…. தவறி விழுந்து பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வளையப்பட்டி கிராமத்தில் ராமாக்காள்(87) வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் 80 அடி ஆழமுடைய தண்ணீர் இல்லாத தோட்டத்து கிணற்றில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கூண்டு வைத்து பிடித்த நபர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

குருவிகளை பிடித்து விற்பனை செய்த நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அ.கலையம்புத்தூர் பகுதியில் கூண்டு வைத்து குருவிகளை பிடிப்பதாக பழனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் பழனி குமார், வனவர் சங்கர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குமாரசமுத்திரம் அருகே இருக்கும் வயல்வெளியில் வலை மற்றும் கூண்டுகளுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை வனத்துறையினர் மடக்கி […]

Categories

Tech |