சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற இரண்டு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலைசெய்யப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும், காட்சிகளில் பதிவான இரண்டு பேரின் உருவங்களை […]
