மேட்டூரில் திருமண விழாவிற்காக யாரும் யோசிக்காத வகையில் வித்தியசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பொதுவாக திருமண விழா மற்றும் பல விசேஷங்களுக்கு பேனர் வைப்பது வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேனர் வைத்து விழாவுக்கு வருபவர்களை ஈர்க்க நினைப்பார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் திருமணத்திற்காக வைத்த பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேலம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்தவர் ஸ்டீபன் […]
