ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி வித்தியாசமாக நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ளது. இதுகுறித்து அறிந்ததும் அந்த கிராமத்தில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் […]
