நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி பகுதியில் முத்து-பாண்டிசெல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக முத்துவிற்கு தனது மனைவியான பாண்டிச்செல்வியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாண்டிச்செல்வி தனது பிள்ளைகளை […]
