பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் திடீரென அழுத தியா மிர்சாவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ளனர். பருவ நிலை மாற்றம் குறித்து பேசியபோது திடீரென கண்ணீர் விட்டு அழுத பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியா மிர்சாவை ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்றார் நடிகை தியா மிர்சா. அங்கு நடைபெற்ற குழு விவாதத்தின்போது பருவநிலை மாற்றம் குறித்து பேசினார். அப்போது தனது பேச்சுக்கு இடையில் திடீரென அவர் கண்ணீர்விட்டு அழுதார். […]
