நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில் 57 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு ஒவ்வொரு இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. […]
