சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் தாலுக்கா பகுதியில் ஜெய கிருஷ்ணன்(60)என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி தோட்டத்திற்கு சென்ற போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
