ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார். அதில், தங்களது கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், அவரது இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டதாகக் கூறி தனது மகன் தேவராஜ் மீது புகார் கொடுத்தார். ஆனால், தனது மகன் தேவராஜ் பெங்களூருவில் கட்டட வேலை செய்துவந்தார். அதற்கு சாட்சியாக கட்டட […]
