தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில் மணிகண்டன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தாதகவுண்டன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் கார்த்திக்(29), ஆனந்த்(25), கபில்(19), மூர்த்தி(16), மஞ்சுநாதன்(26) ஆகியோருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்ல நினைத்தார். அவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் நாகாவதி அணையில் குளிப்பதற்காக சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். அணையில் குளித்துவிட்டு இரவு நேரத்தில் அவர்கள் சரக்கு வாகனத்தில் நல்லம்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை மஞ்சுநாதன் ஓட்டி […]
