நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, பூரண உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். […]
