சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள இந்து அமைப்புகள் , பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனாலும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பாலின […]
