மேஷம் ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும், நாணயம், நேர்மையும் கொண்ட நபர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள்.இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். […]
