மின்வாரிய தலைமைப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 53 ரூபாய் பணம், 48 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு மின்வாரியத்தின் வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்துவருபவர் நந்தகோபால். இவர் புத்தாண்டை முன்னிட்டு மின்வாரிய அலுவலர்களிடம் பரிசுப் பொருள்கள் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புக் […]
