மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி மேற்கொள்ள இருந்த நிலையில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணிக்கு மாநில பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொள்ள மாநில தலைவர் திலீப் கோஸ் வந்திருந்தார். அப்போது காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நந்திகிராமில் அமைதிப் பேரணி நடத்த கடந்த 15 தினங்களுக்கு […]
