கருத்தரங்கில் மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்ஃபோனுக்குள் மூழ்கியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்குவை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் விழிப்புணர்வு […]
