கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தாலுகா அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தாலுகா அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கியுள்ளார். இதில் அமைப்பு செயலாளர் பெரியதமிழன், ஒருங்கிணைப்பாளர் வினோத், வட்ட பொருளாளர் பரக்கத்துன்னிஷா மற்றும் மாவட்ட துணை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளராக ஆனந்தன் வரவேற்றுள்ளார். […]
