தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி […]
